twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வில்லன், இரண்டு ஹீரோக்களில் ஒருவர்... எதற்கும் ரெடி! - ஆதி பேட்டி

    By Shankar
    |

    வில்லன், இரண்டு ஹீரோக்களில் ஒருவர் என எந்த மாதிரி வேடமானாலும் நடிக்க நான் தயார். கதைதான் முக்கியம் என்பதை மரகத நாணயம் உணர்த்திவிட்டது, என்கிறார் நடிகர் ஆதி.

    மரகத நாணயம் நாயகன் ஆதி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். படம் தந்த வெற்றியால் வந்த மகிழ்ச்சி அது.

    அவரைச் சந்தித்தோம்...

    அவரைச் சந்தித்தோம்...

    மரகத நாணயம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது. மரகத நாணயம் திரைப்படத்தை பொறுத்தவரை கதைதான் ஹீரோ. நடிகர் முனிஸ்காந்த் மற்றும் டேனியல் முதுகெலும்பாக இருந்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அருண்ராஜா காமராஜ், நிக்கி கல்ராணி ஆகியோரின் கதாபாத்திரம் மற்றும் அவர்களுடைய நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.

    எப்படி இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

    எப்படி இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

    இப்படத்தின் படப்பிடிப்பின் போதே இயக்குநர் சில காட்சிகளை எடுக்கும் போது இந்தக் காட்சி மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடம் கை தட்டல் வாங்கும். இங்கே நிறைய சிரிப்பார்கள் என்று உறுதியாகக் கூறினார். அப்போது இயக்குநர் எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறார் என்று யோசித்தேன். இயக்குநர் சொன்னது போலவே திரையரங்கில் ரசிகர்களோடு படத்தை பார்க்கும் போது அவர்கள் அனைவரும் அக்காட்சிகளை கைதட்டி சிரித்து ரசிக்கிறார்கள்.

    அடுத்தடுத்த படங்கள்...

    அடுத்தடுத்த படங்கள்...

    அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப் படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இப்படத்தை பற்றி மற்ற தகவல்களை முறையாக விரைவில் அறிவிப்போம்.

    தெலுங்கிலும் நடிக்கிறீர்களா?

    தெலுங்கிலும் நடிக்கிறீர்களா?

    ஆமாம்... தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ரங்கஸ்தளம் 1985 என்ற படத்தில் நடித்து வருகிறேன். பிரம்மாண்டமான பீரியட் படமாக உருவாகி வரும் இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். இயக்குநர் சுகுமார் உடன் பணியாற்றுவது எனக்கு மிகசிறந்த அனுபவமாக உள்ளது. அடுத்ததாக நானியுடன் நின்னு கோரி என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

    இரண்டு ஹீரோக்கள் கதைக்கும் ஓகேவா?

    இரண்டு ஹீரோக்கள் கதைக்கும் ஓகேவா?

    வில்லன் கதாபத்திரமோ அல்லது இரண்டு நாயகர்களுடன் நடிப்பதிலோ எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. எந்த ஒரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பது தான் எனக்கு முக்கியம்.

    தமிழா... தெலுங்கா?

    தமிழா... தெலுங்கா?

    தெலுங்கு விட நான் தமிழ் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன் இதை நான் தெலுங்கு பிரஸ் மீட் ஒன்றில் கூட கூறியுள்ளேன். ஏனென்றால் நான் இங்கு தமிழ் நாட்டில்தான் படித்து வளர்ந்தேன். இங்கே வெளியாகும் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வளர்ந்துள்ளேன். அதனால் எனக்கு தமிழ் எளிதாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது.

    எப்போ கல்யாணம்?

    எப்போ கல்யாணம்?

    எல்லோரும் கல்யாணம் எப்போது என்று கேட்கிறார்கள் ?? கல்யாணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது , வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் கல்யாணம் பண்ண உள்ளேன்.

    English summary
    Interview of Maragatha Naanayam hero Aadhi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X