»   »  நெடுஞ்சாலை புகழ் நடிகர் ஆரியின் தாய் மரணம்

நெடுஞ்சாலை புகழ் நடிகர் ஆரியின் தாய் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நெடுஞ்சாலை பட புகழ் நடிகர் ஆரியின் தாய் முத்துலட்சுமி இன்று காலமானார்.

நெடுஞ்சாலை பட புகழ் நடிகர் ஆரி பழனியை சேர்ந்தவர். அவர் சென்னையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார். அவரின் தாய் முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணி அளவில் புதுக்கோட்டையில் காலமானார்.

Actor Aari's mother no more

அவரது உடல் பழனி கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச் சடங்கு நடக்கிறது. இது குறித்து ஆரி ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,

இன்று 3am அளவில் எனது தாயர் முத்துலட்சுமி இயற்கை எய்தினார் இறுதி சடங்கு 25/02/2017 அன்று காலை பழனியில் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.

அவர் தனது தாய் பற்றி மேலும் ட்வீட்டியிருப்பதாவது,

நண்பர்களே நான் சென்னை வீட்டில் இல்லை திண்டிவனத்தில் படப்பிடிப்பில் உள்ளேன். அம்மா புதுக்கோட்டையில் இறந்துவிட்டார் பழனிக்கு செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Actor Aari's mother Muthulakshmi passed away on friday in Pudhukottai and her last rites will be performed tomorrow in Palani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil