»   »  சிவக்குமார் முதல் அனுஷ்கா வரை.. திரையுலகில் வலம் வரும் யோகா நிபுணர்கள்!

சிவக்குமார் முதல் அனுஷ்கா வரை.. திரையுலகில் வலம் வரும் யோகா நிபுணர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் சினிமாவில் உள்ள சில யோகா நிபுணர்கள் நினைவுக்கு வந்தார்கள். சினிமாவில் திறமையைப் போலவே, உடல் கட்டுக்கோப்பும் முக்கிய அம்சமாகும்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகர்கள் யோகா மூலம் தங்களது உடலைக் கட்டுக் கோப்பாக பேணி வருகின்றனர். இதோ, அவ்வாறு யோகா மாஸ்டர்களாக உள்ள சில திரைப் பிரபலங்கள் பற்றி இங்கே காணலாம்.

சிவக்குமார்...

சிவக்குமார்...

என்றும் மார்க்கண்டேயர் என எப்போதும் இளமையாக தோற்றத்துடன் காணப்படுபவர் சிவக்குமார். தனது இரண்டு மகன்களும் ஹீரோவாக நடித்து வரும் சூழலிலும், யோகா மூலம் உடலைக் கட்டுக்கோப்பாக பேணி, இன்னும் உடலாலும், மனதாலும் இவர் இளைஞராக வலம் வருகிறார்.

பூமிகா...

பூமிகா...

தமிழில் ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூமிகா. தமிழ், தெலுங்கு, இ‌ந்‌தி உ‌ள்‌ளி‌ட்ட மொ‌ழிக‌ளி‌ல் நடி‌த்துள்ள பூமிகா, மும்பையைச் சேர்ந்த யோகாசன குரு பாரத் தாகூர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அனுஷ்கா..

அனுஷ்கா..

யோகா மூலம் தான் அனுஷ்காவிற்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது எனலாம். தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள அனுஷ்கா, நடிகை பூமிகாவின் கணவர் பாரத்திடம் யோகா கற்றவர். நடிகையாவதற்கு முன் யோகா டீச்சராக இருந்தார் அனுஷ்கா. அவரிடம் யோகா கற்க வந்த தெலுங்கு இயக்குநர் மூலம் அனுஷ்கா நடிகை ஆனார்.

ஷில்பா ஷெட்டி...

ஷில்பா ஷெட்டி...

மிஸ்டர் ரோமியோ, குஷி உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரபல பாலிவுட் நடிகையான இவர் ஒரு யோகா மாஸ்டர். யோகா மூலம் தனது உடலை மட்டுமின்றி, மற்றவர்களும் ஆரோக்கியமாக வாழ உதவி புரிந்து வருகிறார் இவர்.

தமன்னா

தமன்னா

இவருக்கு யோகா தெரியுமான்னு தெரியாது.. ஆனால் தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் அறிமுகக் காட்சியில் இவர் யோகா செய்வது போல காட்டுவர்கள். ஸோ, இவருக்கும் யோகா தெரிந்திருக்கும் என்றே நம்புவோம்.

ஸ்ரேயா :

ஸ்ரேயா :

சிவாஜி, மழை, கந்தசாமி உள்பட தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. உடலை வில்லாக வளைத்து நடனமாடும் இவரும் யோகா பிரியை தான்.

இலியானா :

இலியானா :

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. தொடர்ந்து தமிழ்ப் படங்கள் அமையாத நிலையில் தெலுங்கிற்கு சென்றார். தற்போது அங்கு முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்த இலியானாவும் யோகா செய்து தான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

English summary
In Tamil cinema industry some of the actor and actress like Sivakumar, Anushuka know yoga and they are practicing it regularly.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil