ரசிகருக்காக களத்தில் இறங்கிய அஜித்: உதவி செய்றதுலயே இதுதான் அல்டிமேட்டான சம்பவம்

ஹிமாலயாஸ்: தமிழ் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.

பைக் பிரியரான அஜித், கடந்த சில தினங்களாக இமையமலை பகுதிகளில் பைக் ரெய்டு சென்று வருகிறார்.

பைக் ரெய்டு சென்றிருந்த அஜித், ரசிகர் ஒருவருக்கு உதவி செய்த சம்பவம் ட்ரெண்டாகியுள்ளது.

ஏகே 61 அப்டேட் கேக்கும் ரசிகர்கள்

ஏகே 61 அப்டேட் கேக்கும் ரசிகர்கள்

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக அஜித் - ஹெச் வினோத் கூட்டணி 'ஏகே 61' படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டைட்டில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால், ஏகே 61 படத்தின் அப்டேட் வேண்டும் என ரசிகர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். இதனிடையே அஜித் தனது BMW பைக்கில் காஷ்மீர், இமயமலை பகுதிகளில் ட்ரிப் சென்று வருகிறார்.

ரசிகருக்காக களமிறங்கிய அஜித்

ரசிகருக்காக களமிறங்கிய அஜித்

அஜித்தின் பைக் ரெய்டில் நடிகை மஞ்சு வாரியரும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இமயமலை பகுதிகளில் அஜித் பைக் ரெய்டு சென்றுள்ளார். அப்போது ரசிகர் ஒருவருக்கு அவர் உதவிய சம்பவம் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. மஞ்சு காஷ்யபா என்ற அந்த ரசிகர் இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏதோ ஒரு காரணத்துக்காக தான் எதுவும் நடக்கும் என்பார்கள். அப்படி ஒன்றுதான் எனக்கு நடந்தது" என அந்தப் பதிவை தொடங்கியுள்ளார்.

யாரென்றே தெரியாமல் உதவிக் கேட்டேன்

யாரென்றே தெரியாமல் உதவிக் கேட்டேன்

"முதன்முறையாக எனது பைக் பயணத்தில் டயர் பஞ்சர் ஆகிவிட்டதால் அங்கு உதவி தேடினேன். அப்போது எனது கனவு பைக்கான BMW 1250GSA என்னை கடந்துச் சென்றது. நான் அந்த பைக்கை நிறுத்தி அவரிடம் ஏர் கம்ப்ரஸர் கேட்டேன். அதற்கு அவர் பின்னே வரும் வண்டியில் இருப்பதாவும், 10 நிமிடங்களில் அந்த வண்டி வருவதாகவும் கூறினார். தொடர்ந்து அவரிடம் எனது பெயர் வேலையை சொல்லி அறிமுகம் ஆகிக் கொண்டேன். அவரிடம் பெயர் கேட்டபோது, நான் அஜித்! என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். உடனே உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றேன். அப்போது கொஞ்சம் கூட யோசிக்காமல் அஜித்தே எனது பைக்கை சரி செய்தார். அடுத்த இரண்டு மணி நேரம் அவருடன் பயணித்தேன்" என பதிவிட்டுள்ளார்.

அஜித்துடன் டீ குடித்ததில் மகிழ்ச்சி

அஜித்துடன் டீ குடித்ததில் மகிழ்ச்சி

இந்த நெகிழ்ச்சியான பதிவில் அஜித்துடன் டீ குடித்தது குறித்தும், அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார். "பின்னர் உங்களுடன் டீ குடிக்கலாமா? என கேட்டதோடு, அருகில் இருந்த கடையில் அஜித்துடன் இணைந்து டீ குடித்தேன். அப்போது 10 அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி பேசிக் கொண்டோம். பின் அவர் எங்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு சென்றார். மிகப் பெரிய மனிதரான அஜித் எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப எளிமையாக பழகியது மனிதர்கள் மீது அவர் வைத்துள்ள மரியாதையை காட்டுகிறது. மேலும், என்னால் இந்த நாளை மறக்க முடியாது, அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவை இப்போது அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X