Don't Miss!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
“உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்“..ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய அஜித்!
சென்னை : காதுகளை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு திடீரென அறிவுரை கூறியுள்ளார்.
Recommended Video
அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து அஜித் 61 படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தற்போழுது விசாகப்பட்டினத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படம் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 42 ஹீரோயின் இவரா?...அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கு

வலிமை
அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. அஜித்தின் 60-வது படமான வலிமை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பைக்கை பயன்படுத்தி போதை பொருளை கடத்தும் கும்பலை விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில், அம்மா, தம்பி சென்டிமெண்ட் சற்று அதிகமாகவே இருந்ததால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படம் வெளியான 3 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

3வது முறையாக
வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகும் படம் ஏகே 61. இந்த படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் உருவாகிய அதே கூட்டணியில் தற்போது 3-வது முறையாக அஜித் படம் உருவாகி வருகிறது.

இரட்டை வேடத்தில்
அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராகி வருகிறதாம். ஐதராபாத்தில் மவுண்ட் ரோடு போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக 9 ஏக்கரில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கான கதை வேலையும் விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்"
இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் டின்னிடஸ் தொடர்பான குறிப்பு அடங்கிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு "உங்கள் காதுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" நிபந்தனையற்ற அன்பு எப்போதும் அஜித்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.