Don't Miss!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
F3 படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அல்லு அர்ஜுன்!
ஹைதராபாத் : F2 வெற்றியை தொடர்ந்து இப்பொழுது F3 விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் இப்படத்தில் நடிக்க ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
என்னய்யா..
சினிமா
கதையா
சொல்லிட்டு
இருக்கீங்க...
அவரு
வானத்தை
போல...
இவங்க
சர்க்கார்!
F2 போலவே இந்த திரைப்படமும் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வர படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் அல்லு அர்ஜுன் சர்ப்ரைஸ் விசிட் செய்து படக்குழுவிற்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கலகலப்பான குடும்ப திரைப்படமாக
கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான F2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கலகலப்பான குடும்ப திரைப்படமாக வெளியான இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் ஹீரோவாக நடித்திருக்க தமன்னா மற்றும் மெஹ்ரீன் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். ஆரம்பம் முதல் இறுதிவரை அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டது.

ஹைதராபாத்தில் தொடங்கியது
அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான இப்படம் 2 கணவன் மனைவிக்கு இடையேயான புரிதலை மிக காமெடியுடன் கூறியிருந்தது. F2 வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக இப்பொழுது F3 தயாராகி வருகிறது. கொரோனா சூழல் காரணமாக சில மாதங்களுக்கு முன்பே தொடங்க இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது.

அல்லு அர்ஜுன் திடீரென சர்ப்ரைஸ் விசிட்
F2 படத்தில் நடித்த அதே நடிகர் நடிகைகள் இந்த திரைப்படத்திலும் நடிக்க இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. F2 படத்தை இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி இந்த படத்தையும் இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

F3 படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்
நடிகர் அல்லு அர்ஜுன் இப்பொழுது புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமாரன் இப்படத்தை இயக்கி வருகிறார் . இப்படம் அனைத்து கட்டப் படப்பிடிப்பு பணிகளும் முடிந்து இப்போது தயாரிப்பு பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் F3 படப்பிடிப்பு தளத்திற்கு அல்லு அர்ஜுன் திடீரென விசிட் செய்து படக் குழுவினரை சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.