தல என கத்திய ரசிகர்கள்.. சைகையால் சைலண்டாக்கிய அஜித்.. திருப்பதியில் நடந்த சம்பவம்!
சென்னை: நடிகர் அஜித் குமார் திருப்பதி ஏழுமலையால் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அஜித்தை பார்த்து ரசிகர்கள் கூச்சலிட்டு கத்தினார்கள். அந்த நேரத்தில் அஜித் செய்த செயல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது
துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடித்த எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படம் வெளியானது. இதில் விடாமுயற்சி படம் அஜித் போன்ற மாஸ் நடிகர் நடிக்கும் படமில்லை என விமர்சனம் எழுந்தது, படம் தோல்வியைத் தழுவியது. ஆனால், அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கிய, குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அஜித்குமார்: குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் குமார் கார் பந்தயங்களில் பிசியாக கலந்துகொண்டு வெற்றிகளை குவித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்திய வருகிறார். கடந்த ஒரு சில நாட்களாகவே இந்தியாவில் இருக்கும் அஜித், கடந்த வாரம் கேரளாவில் இருக்கும் பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, திருப்பூரில் கொங்குநாடு ரைபிள் கிளப்பின் நிறுவனர் செந்தில் குமாருடன் இணைந்து, துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோவை அஜித்தின் மேளாலர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருந்தார்.
அஜித் செய்த செயல்: தற்போது, அஜித்குமார் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார், பட்டு வேஷ்டி சட்டையில் வந்த அஜித்தை பார்த்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியால், தல தல என கத்தினார்கள். அப்போது, அஜித், கோவிலுக்குள் இப்படி காத்த கூடாது என்பது போல சைகை காட்டினார். அதே போல, எடுக்க ஆசைப்பட்டவர்களுடன் அஜித் போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது, காது கேட்காத மாற்றுத்திறனாளி அஜித்துடன் போட்டோ எடுக்க வந்தார். அஜித் அவரின் செல்போனை வாங்கி அவருடன் செல்ஃபி எடுத்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அது தான் அஜித்தின் பண்பு, ஒரு நடிகர் அப்படித்தான் இருக்க வேண்டுமென கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
AK64: தற்போது அஜித் இந்தியாவில் இருப்பதால், AK64 பட அறிவிப்பு குறித்து தகவல் ஏதாவது வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். குட் பேட் அக்லி படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றதால், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார்? என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











