தீவிர இலக்கிய வாசிப்பாளர்..பிரதாப் போத்தன் மறைவு..கமல்ஹாசன் இரங்கல் !

சென்னை : தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Pratap Pothen உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் Kamal Haasan

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பிரதாப் போத்தன் இன்று காலை 8 மணி அளவில் தூக்கத்திலேயே காலமானார். அவரின் உடல் அஞ்சலிக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதாப் போத்தன்

பிரதாப் போத்தன்

மலையாளத்தில் பரதன் இயக்கிய ஆரவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான பிரதாப் போத்தன். அதன் பின் அழியாத கோலங்கள், இளமைக் கோலம், மூடுபனி உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்கள்

100க்கும் மேற்பட்ட படங்கள்

கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு என 12க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தை இயக்கியதற்காக அவர் தேசிய விருது பெற்றுள்ளார். நடிகராகவும் வலம் வந்த பிரதாப் போத்தன் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன்.

நேரில் அஞ்சலி

நேரில் அஞ்சலி

இந்த நிலையில் நடிகர் இயக்குநர் பிரதாப் போத்தன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். இதையடுத்து பி.சி.ஸ்ரீராம் மற்றும் ராஜு மேனன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பிரதாப் போத்தனின் ரசிகர்களும் ட்விட்டரில் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தீவிர இலக்கிய வாசிப்பாளர்

தீவிர இலக்கிய வாசிப்பாளர்

நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதாப் போத்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் பிரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கென் அஞ்சலி என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X