For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிவாஜி படத்தின் அப்பட்டமான காப்பி... வாரிசு படத்தை வைத்து செய்த பயில்வான் ரங்கநாதன்!

  |

  சென்னை : வாரிசு திரைப்படம் அந்த படத்தின் அப்பட்டமான காப்பி என பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, யோகிபாபு, ஷியாம்,எஸ்.ஜே சூர்யா, குஷ்பு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

  வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை 4 மணிக்கு திரையரங்கில் வெளியானது. அதற்கு முன்னதாக செவ்வாய்கிழமை பத்திரிக்கையாளர்கள் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களுக்கு ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது.

   வாரிசு, துணிவு FDFS Box Office ரிப்போர்ட்... விஜய்யை ஓரங்கட்டிய அஜித்... வெறித்தனமான சம்பவம் வாரிசு, துணிவு FDFS Box Office ரிப்போர்ட்... விஜய்யை ஓரங்கட்டிய அஜித்... வெறித்தனமான சம்பவம்

  வாரிசு

  வாரிசு

  இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த, பயில்வான் ரங்கநாதன் வாரிசு படத்தின் நிறை குறைகளை விரிவாக அலசி உள்ளார். இப்படத்தில், உலகத்தின் முன்னணி பிஸ்னஸ்மேனாக, கோடீஸ்வரராக சரத்குமார் இருக்கிறார். இதில், சரத்குமார் ஜெயசுதா தம்பதியின் மூன்றாவது மகன் தான் விஜய், மூத்தவர் ஸ்ரீகாந்த், இளையவர் ஷியாம். இதில்,சரத்குமாருக்கும் விஜய்க்கும் கருத்து மோதல் ஏற்பட்டு விஜய் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

  பணம் இருந்தும் பாசம் இல்லை

  பணம் இருந்தும் பாசம் இல்லை

  சரத்குமார் திடீரென நோயால், பாதிக்கப்பட ஜெயசுதா, 60வது கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார். இதற்காக 7 வருடங்களுக்கு பிறகு விஜய் வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த பின் எவ்வளவு பணம் இருந்த போதும் வீட்டில் நிம்மதி இல்லை, யாரிடமும் பாசம், அன்பு இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார் விஜய். அதேபோல பிஸ்னசிலும் அண்ணன் அப்பாவுக்கு செய்யும் துரோகத்தை கண்டுபிடித்து குடும்பத்தை சேர்த்துவைப்பதுதான் கதை.

  கைத்தட்டலை பெற்றார்

  கைத்தட்டலை பெற்றார்

  காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக படங்களைப் போன்ற ஒரு மென்மையான ஹீரோவாக விஜய் இப்படத்தில் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஒரு புதிய களத்தில் நடித்து பாடி லாங்குவேஜை மாற்றி சற்று வித்தியாசமாக நடித்துள்ளார். இதற்கு பல இடங்களில் கைத்தட்டல் கிடைத்தது. இவரின் இந்த புது ஸ்டைலை ரசிகர்கள் ரசித்தனர்.

  கவர்ச்சியில் கலக்கி உள்ளார்

  கவர்ச்சியில் கலக்கி உள்ளார்

  படத்தில் வரும் பல செண்டிமென்ட் காட்சியில் ரசிகர்கள் கண்கலங்கும் படி நடித்திருக்கிறார். சோக காட்சியில் தன்னுடை நடிப்பின் பரிணாம வளர்ச்சியை காட்டி இருக்கிறார் விஜய். படத்தின் கதாநாயகி ராஷ்மிகா பெயரளவுக்கு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அந்த காட்சியிலும் கவர்ச்சியை அதிகமாக காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் ராஷ்மிகா.

  அட்டகாசமான நடிப்பு

  அட்டகாசமான நடிப்பு

  விஜய்யின் அம்மாவாக நடித்துள்ள ஜெயசுதா, ஒரு தாயின் மனவேதனையை அப்பட்டமாக திரையில் காட்டி உள்ளார். அதே போல, விஜய்க்கு பண உதவி செய்யும் பைனான்சியராக வரும் எஸ்.ஜே சூர்யா இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும், நடை,உடை,பாவனை என அனைத்தும் சும்மா மிரட்டலாக நடித்து கைத்தட்டலை பெறுகிறார்.

  அப்பட்டமான காப்பி

  அப்பட்டமான காப்பி

  இயக்குநர் வம்சி, விஜய்யை வைத்து முழுக்க முழுக்க ஒரு குடும்பக்கதையை எடுத்துள்ளார். இதுபோன்ற பல படங்கள் வந்துள்ளன, எனக்கு தெரிந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் நடித்த படிக்காத மேதை திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. ரங்காராவ் வேடம் சரத்குமாருக்கும், சௌகார் ஜானகி வேஷம் ராஷ்மிகாவுக்கு கொடுத்து கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான். இருந்தாலும்,குடும்பத்தோடு பார்க்க உகந்தபடம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

  English summary
  Actor and youtuber bayilvan ranganathan review about varisu
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X