Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாழ்க்கையே மாறும்னு நினைச்சோம்..ஆனா..வெண்ணிலா கபடிகுழு ஹரி வைரவனை நினைத்து கலங்கும் அப்புக்குட்டி!
சென்னை : வாழ்க்கையே மாறும்னு நினைச்சோம் ஆனால், இப்படி ஆகிப் போச்சு என நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு நடிகர் அப்புக்குட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி, ஹரி வைரவன் உட்பட பல நடித்துள்ளனர்.
’வெண்ணிலா கபடி குழு’ ஹரி வைரவன் மறைவு.. ரொம்ப வேதனையா இருக்கு.. இயக்குநர் சுசீந்திரன் வருத்தம்!

வெண்ணிலா கபடிகுழு
வெண்ணிலா கபடிகுழு படத்தில் விஷ்ணு விஷாலின் நண்பர்களில் ஒருவராக நடித்து பரீட்சயமானவர் தான் நடிகர் ஹரி வைரவன். இந்த படத்தைத் தொடர்ந்து குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்த ஹரி வைரவனுக்கு பட வாய்ப்புகள் வந்ததால் மகிழ்ச்சியில் இருந்தார்.

மோசமான நிலையில்
ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை திடீரென்று ஒருநாள் பேச்சு, மூச்சு இல்லாமல் உடலில் எந்த ஆசைவும் இல்லாமல் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்து மீண்டு கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு கிட்னியும் செயலிழந்து மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார்.

நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்தார்
இதையடுத்து, இன்று அதிகாலை 12:15 மணியளவில் நடிகர் ஹரி வைரவன் உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கடச்சநேந்தலில் ஹரி வைரவனுக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

வாழ்க்கை மாறப்போகுதுனு நினைச்சோம்
இந்நிலையில், வெண்ணிலா கபடிகுழு படத்தில் ஹரி வைரவனுடன் இணைந்து நடித்த அப்புக்குட்டி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், வெண்ணிலா கபடிக்குழு வைரவன் இன்னைக்கு நம்பக்கூட இல்லை, எல்லாரும் ஜெயிப்போம் என்று நாங்கள் அனைவரும் நடித்த படம் வெண்ணிலா கபடிகுழு. அந்த படம் வெற்றி பெற்று அனைவரும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அனைவரின் வாழ்க்கையும் மாறப்போகுதுனு நினைச்சோம். ஆனால், வைரவன் நம்மை விட்டு போனதை நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.

கண்கலங்கிய அப்புக்குட்டி
குள்ளநரிக்கூட்டம் படத்திலும் நான் அவருடன் நடித்துள்ளேன், வைரவன் அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார். இரண்டு நாட்களுக்கு முன் கூட அவரின் மனைவியிடம் வைரவன் உடல்நிலை குறித்து கேட்டேன். நல்லா இருக்கிறார், நடக்க மட்டும்தான் முடியவில்லை என்று சொன்னாங்க. நானும் குணமடைந்து வந்துவிடுவார் என்று நினைச்சேன். ஆனால், இன்று அவர் நம்முடன் இல்லை. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் என நடிகர் அப்புக்குட்டி கண்கலங்கி பேசினார்.