தேஜாவு படப்பிடிப்பு முடிந்தது… கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் !

சென்னை : அருள்நிதி நடிக்கும் தேஜாவு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து, படத்தின் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தி விரைவில் வெளியீட்டிற்கு கொண்டு வர படக்குழு மும்முரமாக உள்ளனர்..

அறிமுகம்

அறிமுகம்

வம்சம் திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அருள்நிதி. அந்த திரைப்படத்தை அடுத்து, அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய டிமாண்டி காலனி திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் ஒரு திகில் திரைப்படமாகும். இப்படத்தில் ராமேஷ் திலக், சனந்த், அபிசேக் ஜோசப் ஆகியோர் நடித்திருந்தனர்.

திகில் படத்தில் ஆர்வம்

திகில் படத்தில் ஆர்வம்

ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம் போன்ற படங்கள் இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படங்களாக அமைந்தன. க்ரைம், திகில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள அருள்நிதி, அதற்கு தகுந்தது போலவே கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அருள்நிதி

அருள்நிதி

இந்நிலையில், அருள்நிதி தேஜாவு, என்ற வித்தியாசமான கதையில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன். 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

கேக் வெட்டி கொண்டாட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தேஜாவு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, அடுத்த கட்ட பணிகளை விரைவுபடுத்தி படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X