twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “தேவையில்லாமல் அந்த மாதிரிக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்”: அருள்நிதியின் ஸ்மார்ட் பதில்

    |

    சென்னை: அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படம் நாளை ( ஆக 26) திரையரங்குகளில் வெளியாகிறது.

    Recommended Video

    Dejavu Public Review | Dejavu Movie Review | Dejavu Tamil Cinema Review | Arulnidhi|*Review

    இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள டைரி, ஹாரர் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், அருள்நிதி உள்ளிட்ட 'டைரி' படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்! Thiruchitrambalam Day 3 Box Office: வெற்றியை ருசித்த தனுஷ்.. வசூல் வேட்டையாடும் திருச்சிற்றம்பலம்!

    தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகள்

    தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகள்

    2010ல் வெளியான ''வம்சம்' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயன், மௌனகுரு, தகராறு, டிமொன்டி காலனி, பிருந்தாவனம், டி பிளாக், தேஜாவு என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவைகளில் மெளனகுரு, டிமாண்டி காலனி, சமீபத்தில் வெளியான தேஜாவு ஆகிய படங்கள், ரசிகர்களிடம் சிறப்ப்பான வரவேற்பை பெற்றன. அதேபோல் விமர்சன ரீதியாகவும் நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

    நம்பிக்கையில் டைரி திரைப்படம்

    நம்பிக்கையில் டைரி திரைப்படம்

    இந்நிலையில், அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படம், நாளை (ஆக.26). திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் இன்னாசி பாண்டியன் இயக்குநராக அறிமுகமாகிறார். அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரோன் ஏதன் யோஹன் இசையமைத்துள்ள 'டைரி' படத்தை, பைஸ்டார் கிரேஷன்ஸ் சார்பாக, கதிரேசன் தயாரித்துள்ளார்.

    டைரி பத்திரிகையாளர்கள் சந்திப்பு

    டைரி பத்திரிகையாளர்கள் சந்திப்பு

    'டைரி' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், அருள்நிதி, இயக்குநர் இன்னாசி பாண்டியன், நடிகர்கள் மாதேஷ், சதீஷ், பவித்ரா மாரிமுத்து, இசையமைப்பாளர் ரோன் ஏதன் யோஹன், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதாகவும், திரைக்கதை வித்தியாசமாக இருக்கும் எனவும் இயக்குநர் இன்னாசி பாண்டியன் தெரிவித்தார்.

    அருள்நிதி சொன்ன ஸ்மார்ட் பதில்

    அருள்நிதி சொன்ன ஸ்மார்ட் பதில்

    இதனைத் தொடர்ந்து பேசிய அருள்நிதியிடம், புகைபிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அருள்நிதி, "சும்மா ஸ்டைலுக்காக புகைபிடிக்கும் அல்லது மது அருந்தும் காட்சிகளை நான் ஆதரிப்பதில்லை. என்னுடைய 'ஆறாது சினம்' திரைப்படத்தில் புகைபிடிப்பது போலவும், மது அருந்தும் காட்சியிலும் நடித்திருப்பேன். அக்கதைக்கு மிகவும் தேவையாக இருந்ததால் அப்படிப்பட்ட காட்சிகளில் நடித்தேன்." எனக் கூறினார்.

    தேவையில்லாமல் நடிக்க மாட்டேன்

    தேவையில்லாமல் நடிக்க மாட்டேன்

    தொடர்ந்து பேசிய அவர், "மற்றபடி என்னுடைய படங்களில் நான் மது அருந்தும், புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறேன். ஒரு படத்தில் புகைபிடிக்கும்படி ஒரு காட்சியை வைத்து அதில் இயக்குநர் நடிக்க சொன்னார். அந்த சீனுக்கு அப்படி ஒரு காட்சி தேவையில்லையே என்று அவரிடம் சொல்லி தவிர்த்தேன்.. படத்தில் கண்டிப்பாக அப்படிப்பட்ட காட்சிகள் தேவையெனில் நான் நடிப்பேன். இல்லையென்றால் புகைபிடிக்கும், மது அருந்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன். என்னுடைய பிள்ளைகளோ அல்லது மற்ற பிள்ளைகளோ இப்படிப்பட்ட காட்சியை பார்க்க நான் விரும்பவில்லை" என அருள்நிதி தெரிவித்துள்ளார்.

    English summary
    The press meet of the film crew of 'Diary' starring Arulnithi was held in Chennai today. Then, Arulnithi said that he will not act in scenes of unnecessary drinking and smoking( அருள்நிதி நடித்துள்ள ‘டைரி’ படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அருள்நிதி, தேவையில்லாமல் மது அருந்தும் காட்சிகளிலும் புகை பிடிக்கும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X