»   »  அருள்நிதிக்கு கெட்டிமேளம்... முன்னாள் நீதிபதி மகளை மணக்கிறார்... நிச்சயதார்த்தம் நடந்தது!

அருள்நிதிக்கு கெட்டிமேளம்... முன்னாள் நீதிபதி மகளை மணக்கிறார்... நிச்சயதார்த்தம் நடந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகனும், நடிகருமான அருள்நிதிக்கு திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தேறியது.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகள் கீதனாவை அருள்நிதி மணக்கிறார்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முக அழகிரி உள்பட கருணாநிதி குடும்பத்தினர் பங்கேற்றனர். கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் பங்கேற்றனர்.

Actor Arulnithi marriage engagement

கட்சியைவிட்டு நீக்கப்பட்ட மு.க.அழகிரி நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த விழாவில் கலந்துகொண்டார். மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரியுடன் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் முக அழகிரி, மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அழகிரியை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் முக தமிழரசு.

கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மீடியா உள்பட திரையுலகினர் யாரும் அழைக்கப்படவில்லை.

English summary
M Karunanidhi, MK Azhagiri, MK Stalin, Kanimozhi have attended the marriage engagement of Actor Arulnidhi
Please Wait while comments are loading...