»   »  போதையில் கார் ஓட்டி போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது!

போதையில் கார் ஓட்டி போலீஸ் வேனில் மோதிய நடிகர் அருண் விஜய் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டியதற்காக இன்று அதிகாலை 3 மணிக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழில் பிரபல நடிகராக உள்ளார். குறிப்பாக நடிகர் அஜீத்துடன் இணைந்து இவர் நடித்த என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு கவனிக்கத்தக்க நாயகனாகிவிட்டார்.

Actor Arun Vijay booked in Drunk and Drive case

இப்போது அவர் நடித்த வா டீல், குற்றம் 13 போன்ற படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, அருண் விஜய் தனது ஆடி காரை அதிவேகமாக ஓட்டி வந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார். இதில் அருண் விஜய் எவ்வித காயங்கள் இன்றி தப்பினார்.

ஆனால் போலீஸ் வாகனம்சேதமடைந்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மது அருந்தி தலை கொள்ளாத போதையில் காரை ஓட்டி வந்துது தெரியவந்தது.

உடனே அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அருண் விஜய்யின் தந்தை நடிகர் விஜயகுமார் உடனடியாக காவல் நிலையம் விரைந்தார். வழக்குப் பதிவுக்குப் பின்னர் சிறிது நேரம் காவல் நிலையத்தில் இருந்த அருண் விஜய் பின்னர் தந்தையுடன் வீடு திரும்பினார்.

English summary
Actor Arun Vijay has booked in drunk and drive case on Today early morning.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil