Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 5 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அருண்விஜயின் “மாஃபியா“.. 21ந்தேதி வெளியாகும்.. இயக்குனர் நம்பிக்கை!
சென்னை : மாஃபியா திரைப்படம் வரும் 21ந்தேதி திரைக்கு வரும் என்று இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அருண்விஜய் மற்றும் பிரசன்னா வில்லனாக நடித்திருக்கும் படம் தான் மாஃபியா. இந்த படத்தை துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான சுபாஸ்கரன் தயாரித்து இருக்கிறார்.

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாஃபியா படம் முடியும் தருவாயில் உள்ளது. வரும் பிப்ரவரி 21-ம் தேதி படம் வெளியாகும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் நேர்காணல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அன்புச்செழியன் வீட்டில் 4 நாட்களாக நடந்த ஐடி ரெய்டு நிறைவு: மூட்டை மூட்டையாக பணம், ஆவணங்கள் பறிமுதல்
இதில் அனைத்து இடங்களிலும் இயக்குனர் கார்த்திக் நரேனை பார்த்து கேட்கப்படும் முதல் கேள்வி நரகாசூரன் படம் ஏன் தாமதமாகிறது, எப்போது படம் வெளியாகும் என்பது தான். இதற்கும் கார்த்திக் நரேன் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பதில்களையே கொடுத்து வருகிறார். படம் 2018லே முடிவடைந்து விட்டது இருந்தும் தயாரிப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் இன்னும் படத்தை தாமதப்படுத்தி வருகிறது.

கார்த்திக் நரேன் சினிமாவில் பின்புலம் இன்றி தனது முதல் படத்தின் மூலமாக மாபெரும் வெற்றியை சந்தித்தவர். இதனாலே இவரின் இரண்டாவது படமான நரகாசூரன் மிக பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த படத்தை கௌதம் மேனன் தயாரிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்திருந்தது. இதை தாண்டி அதில் நடித்த நடிகர்கள் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருந்த படம் வெளியாகாமல் போனது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். இதற்கு முன் பிரசன்னா மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படம் மாதிரி இல்லாமல் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான முகபாவங்களை கொடுக்கும் வில்லனாக பிரசன்னா நடித்திருக்கிறார் என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்து இருக்கிறார் .

மாஃபியா படத்தில் முதல்முறையாக போலீஸாக நடித்து இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர், இந்த படத்தில் இவர்களுடன் பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்து உள்ளனர். படம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாக உள்ளது. தொடர் வெற்றிகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அருண்விஜய்க்கு இந்த படம் பெரிய வெற்றியை பெற்று தரும் என நம்பப்படுகிறது.
