கிட்னி பிரச்சனை.. சிகிச்சைக்கு உதவி கேட்ட பிரபல டிவி நடிகர் பரிதாப மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

மும்பை: மருத்துவ சிகிச்சை உதவிகேட்ட டிவி நடிகர், திடீரென உயிரிழந்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.

கொரோனா காலகட்டத்தில் நடக்கும் இந்த மரணங்களால், திரைத்துறை மற்றும் சின்னத்திரையை சேர்ந்தவர்கள் சோகத்தில் உள்ளனர்.

போலீஸாக புகழ்பெற்றவர்

போலீஸாக புகழ்பெற்றவர்

புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி, நேற்று திடீரென மரணமடைந்த நிலையில், இன்று, இந்தி நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகர், அசீஷ் ராய். 55 வயதான இவர், இந்தியில், 'நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்: த ஃபர்காட்டன் ஹீரோ' என்ற படத்தில் போலீஸாக நடித்து புகழ்பெற்றவர்.

பேசப்பட்ட நடிப்பு

பேசப்பட்ட நடிப்பு

மேலும், ஹோம் டெலிவரி, மேரே பஹேலா பஹேலா பியார், ராஜா நட்வாரியல், பர்கா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தம் தமா தம், யெஸ் பாச், ரீமிக்ஸ், மேரே ஆங்னே மே, ஆரம்ப் உட்பட பல தொடர்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

கிட்னி பிரச்னை

கிட்னி பிரச்னை

பல ஆங்கில படங்களுக்கு இந்தி டப்பிங் பேசி இருக்கிறார். இவர் கடந்த மே மாதம் உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கிட்னி தொடர்பான பிரச்னை இருந்தது தெரியவந்தது.

பேஸ்புக் உருக்கம்

பேஸ்புக் உருக்கம்

இதையடுத்து, தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் சிகிச்சைக்குப் பணம் இல்லை என்றும் டயாலிஸ் செய்வதற்கு உதவுங்கள் என்றும் தனது பேஸ்புக்கில் உருக்கமாகக் கூறியிருந்தார். இது பாலிவுட்டிலும் சின்னத்திரை நடிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நான் பிழைப்பேனா

நான் பிழைப்பேனா

அவருடன் நடித்த சக நடிகர்கள் உதவினர். அப்போது, 'நான் சிரீயசான நிலையில் இருக்கிறேன். நான் பிழைப்பேனா இல்லையா என்பதை இன்னும் ஒரு வாரத்துக்குள் தெரிந்து கொள்வீர்கள்' என்று கூறியிருந்தார். இவர் கடந்த ஜனவரி மாதமும் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார்.

உறுதி செய்த சங்கம்

உறுதி செய்த சங்கம்

இந்நிலையில், மும்பையில் உள்ள அவர் வீட்டில் நேற்று உயிரிழந்துள்ளார். இதை சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உறுதி செய்துள்ளது. அசீஷ் ராயின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அவருடன் நடித்தவர்கள் கூறியுள்ளனர். சோசியல் மீடியாவில் அவருக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X