»   »  காதலித்த பெண்ணை திடீரென திருமணம் செய்துகொண்ட அசோக்.. ட்விட்டரில் நன்றி!

காதலித்த பெண்ணை திடீரென திருமணம் செய்துகொண்ட அசோக்.. ட்விட்டரில் நன்றி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'முருகா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அசோக். அதன் பிறகு 'பிடிச்சிருக்கு', 'கோழி கூவுது', 'காதல் சொல்ல ஆசை', 'உலா' உள்பட பல படங்களில் நடித்தார்.

தற்போது, 'கண்ணகிபுரம் சந்திப்பு', 'வானம் பார்த்த சீமையிலே', 'பிரியமுடன் பிரியா', 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், திடீரென காதலியை திருமணம் செய்திருக்கிறார் அசோக்.

Actor Ashok kumar sudden wedding

அசோக் சென்னையை சேர்ந்த சரண்யாவை கடந்த 19-ம் தேதி திருப்பதியில் திடீர் திருமணம் செய்து கொண்டார். அசோக்கின் மனைவி சரண்யா வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். "இது காதல் திருமணம்தான். என்றாலும் பெற்றோர் சம்மதத்துடனும், ஆசியுடனும் தான் நடந்தது. எனக் கூறியிருக்கிறார் அசோக்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணத்தை அவசரமாக நடத்த வேண்டியது இருந்தது. அதனால் நண்பர்களை அதிகம் அழைக்க முடியவில்லை. விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறேன். நண்பர்களின் ஆசியும், வாழ்த்தும் எனக்கு எப்போதும் இருக்கும்" என ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் அசோக்.

English summary
Ashok was introduced to cinema through Muruga. Ashok is suddenly married to a beloved.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X