Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஸ்வினின் அடுத்த அட்டாக்.. ட்ரெட்மில்லில் வாத்தி கம்மிங் டான்ஸ்.. வைரலாகும் பர்த்டே ஸ்பெஷல்!
சென்னை: "வாத்தி கம்மிங்" பாட்டுக்கு ட்ரெட்மில்லில் அட்டகாசமாக நடனமாடி உள்ளார் நடிகர் அஸ்வின் குமார்.
துருவங்கள் பதினாறு, எனை நோக்கிப் பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் அஸ்வின் குமார் தீவிர கமல் பக்தர்.
சமீபத்தில், ட்ரெட்மில்லில் கமல்ஹாசனின் "அண்ணாத்த ஆடுறார்" பாட்டுக்கு நடனமாடி உலகநாயகனின் பாராட்டுக்களையும் பெற்றார்.
மலையாள
திரைத்
துறை...
கதையுடன்..
கலையையும்
சேர்த்து
வளர்க்கிறது..
அஸ்வின்
குமார்

ஹேப்பி பர்த்டே
நடிகரும் கமல்ஹாசனின் தீவிர ரசிகருமான அஸ்வின் குமாருக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற அசத்தலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனாடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார் நடிகர் அஸ்வின் குமார்.

கமல் ரசிகன்
உலக நாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர், நடிகர் அஸ்வின் குமார். தமிழ் சினிமாவில் தனக்கான இடம் கிடைக்க போராடி வரும் இவர், தனது திறமைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், "அண்ணாத்த ஆடுறார்" பாடலுக்கு ஓடும் ட்ரெட்மில்லில் பக்கவாக ஆடி, பல பிரபலங்களின் பார்வைகளை தன் பக்கம் ஈர்த்து இருந்தார்.

வாழ்க மகனே
அபூர்வ சகோதர்கள் படத்தில் இடம்பெற்ற "அண்ணாத்த ஆடுறார்" பாட்டுக்கு ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்திய அஸ்வின் குமாரின் திறமையை பார்த்த கமல்ஹாசன், "நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!" என பாராட்டி இருந்தார்.
|
ட்ரெட் மில்லில் வாத்தி கம்மிங்
இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் அஸ்வின் குமார், நாளை தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, "வாத்தி கம்மிங்" பாட்டுக்கு ஓடும் ட்ரெட்மில்லில் செம சூப்பராக ஸ்டெப் போட்டு ஆடியுள்ள வீடியோவை தற்போது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

விஜய் கூட நடிக்கணும்
தனது பிறந்தநாள் இன்று என தெரிவித்த அஸ்வின் குமாருக்கு கமல் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், சில விஜய் ரசிகர்கள், சீக்கிரமே, தளபதி விஜய்யுடன் நீங்க நடிக்கணும்னு ஆசைப்படுறேன், அது நடக்கும், உங்க திறமைக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என வாழ்த்தி உள்ளனர்.
Recommended Video

அடிச்சு தூக்கு
தளபதி விஜய்யின் மாஸ்டர் பட பாடலுக்கு ட்ரெட்மில் நடனமாடிய நடிகர் அஸ்வினின் ஆட்டத்தை புகழ்ந்த அஜித் ரசிகர்கள், தல நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் வரும் "அடிச்சு தூக்கு" பாட்டுக்கும் இப்படியொரு நடனத்தை ஆடி அசத்துங்க ப்ரோ என அன்புக் கட்டளை போட்டு வருகின்றனர்.