»   »  நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்.. சங்கத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்.. சங்கத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடைபெறும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்திற்காக, நடிகர்கள் அனைவரும் தங்களது படப்பிடிப்புகளை ரத்து செய்திருக்கின்றனர்.

நடிகர் சங்கத்தின் 62 வது பொதுக்குழு கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் மதியம் 2.15 மணியளவில் தொடங்கியது.

நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்ற பின்னர் நடைபெறும், இந்த முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு நாசர் தலைமை தாங்குகிறார்.

படப்பிடிப்புகள் ரத்து

இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் அனைவரும் பங்குபெற வேண்டும் என்பதற்காக, இன்று நடைபெறவிருந்த படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 1500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

விஷால்

பொதுக்குழு கூட்டம் குறித்து நடிகர் விஷால் "புதிதாக கட்டப்படும் நடிகர் சங்கத்தின் மாதிரி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். சரத்குமார் விவகாரத்தை விட நலத்திட்ட உதவிகளுக்கே இந்தக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்று கூறினார்.

இணையதளம்

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களின் முழு விவரங்கள் கொண்ட இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இந்த இணையதளம் இயக்குநர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஆண்டறிக்கை

மேலும் 2014-2015 க்கான ஆண்டறிக்கை இந்தக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் சங்க அறக்கட்டளையின் செலவு ரூ 3,43,500 மற்றும் செலவுத்தொகை ரூ 7,75,500 என அறிவிக்கப்பட்டது.

சரத்குமார்

சில நாட்களுக்கு முன்னர் சரத்குமார், வாகை சந்திரசேகர், ராதாரவி உள்ளிட்டோர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால் அவ்வாறு யாரையும் நீக்கம் செய்யவில்லை என்று நாசர் மறுப்புத் தெரிவித்திருந்தார். இதனால் சரத்குமார் விவகாரத்தில் இன்று பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor Association 62nd annual general meeting held this afternoon on the campus of Loyola College in Nungambakkam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil