twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய.. பாக்யராஜ் அணி !

    |

    சென்னை : நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து பாக்யராஜ் அணியினர் திடீரென வெளியேறினர்.

    Recommended Video

    வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியேறிய.. பாக்யராஜ் அணி !

    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

    Actor association election vote counting Start in Chennai

    தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.

    பீஸ்ட் ரிலீஸ் தேதி எப்போ தான்ப்பா சொல்வீங்க...குமுறும் ரசிகர்கள் பீஸ்ட் ரிலீஸ் தேதி எப்போ தான்ப்பா சொல்வீங்க...குமுறும் ரசிகர்கள்

    இதையடுத்து இன்று 8 மணி முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டு இருந்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் வெளியேறினர். வெளியே வந்த அவர்கள், வாக்கு எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் உள்ளது என்றனர். தபால் வாக்கெடுப்பில் மொத்தம் பதிவானதே 1042, ஆனால், 1180 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெவித்தனர். கிட்டத்தட்ட 138 ஓட்டு அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    நாங்கள் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போதே வாக்கு எண்ணிக்கையை தொடங்கிவிட்டனர். அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளதற்கு தகுந்த விளக்கம் தரவேண்டும் என்று பாக்யராஜ் அணியினர் கூறினார். பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

    English summary
    Actor association election vote counting Start in Chennai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X