Don't Miss!
- News
தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட "இப்படி" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஜினிகாந்த்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு... சந்திப்புக்கு இது தான் காரணமா ?
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், இன்று நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் வீட்டில் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வழக்கு, பிரச்சனை ஆகியன முடிந்து சமீபத்தில் தான் நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்று, தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ரஜினிகாந்த் அழகானவர் கிடையாது.. நடிப்பதற்கு அழகு தேவையில்லை.. நடிகர் லிவிங்ஸ்டன்!

ரஜினியுடன் திடீர் சந்திப்பு
இந்நிலையில் இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்த்தை, நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், கார்த்தி, பூச்சி முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகி வருகின்றன. சமீபத்தில் இளையராஜா, கமல்ஹாசன், விக்ரம் படக்குழுவினர் சென்று ரஜினியை சந்தித்த நிலையில், தற்போது நடிகர் சங்க நிர்வாகிகளும் சந்தித்துள்ளனர்.

நாசர் சொன்ன தகவல்
ரஜினியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க தலைவர் நாசர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. நடிகர் சங்க கட்டிடம் பற்றி அக்கறையாக விசாரித்தார். சில ஆலோசனைகளையும் வழங்கினார். இரண்டு ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டு விட்டதால், கட்டிடப் பணிகள் பாதியில் நிற்பதால் அது பற்றி விசாரித்தார். மற்றபடி வேறு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை என்றார்.

இது தான் காரணமா
ஆனால் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்க நிதித் தேவை இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஸ்டார் நைட் நடத்த நடிகர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கலாம், அவரை கலந்துக்கொள்ளவும் கேட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சங்க பிளான்
சில ஆண்டுகள் நடிகர் சங்க தேர்தல் வழக்கு காரணமாக முடங்கியிருந்த நிலையில் விஷால் டீமுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன் பின்னர் நடந்த கூட்டத்தில் கட்டடம் கட்டும் பணிக்காக ஸ்டார் நைட் நடத்த திட்டமிட்டுள்ளதாக பேசினார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு என நாசர் சொன்னாலும் நடிகர் சங்க விழா சம்பந்தமாக ரஜினியின் ஆலோசனை ஆதரவு கேட்கவே கூட்டம் என்று கூறப்படுகிறது.