For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதர்வா… 5 சுவாரஸ்யமான கதாபாத்திரங்களின் லிஸ்ட் இதோ !

  |

  சென்னை : நடிகர் அதர்வாக இன்று தனது 32 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

  இவருக்கு ரசிகர்கள், நண்பர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  என்னா குலுக்கு.. மாராப்பை சரியவிட்டு.. 40 வயதில் திணறடிக்கும் நடிகை.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்! என்னா குலுக்கு.. மாராப்பை சரியவிட்டு.. 40 வயதில் திணறடிக்கும் நடிகை.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்!

  இந்த நேரத்தில், ரசிகைகளின் மனங்களை வென்ற அதர்வாவின் ஐந்து சுவாரஸ்யமான கதாபாத்திரங்களைப் பற்றி பார்க்கலாம்.

  முதல் படம்

  முதல் படம்

  நடிகர் முரளியின் மகனான அதர்வா முரளி தனது 21 வயதில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 2010ம் ஆண்டு வெளியான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரது முதல் படம் வெளியான சிறிது நாட்களிலேயே அவரது தந்தை காலமானார்.

  ரசிகர்கள் வாழ்த்து

  ரசிகர்கள் வாழ்த்து

  இருப்பினும் துவண்டுபோவாத அதர்வாக , சவாலான பாத்திரங்களைச் தேர்ந்தெடுத்து நடித்தார். சினிமாத்துறையில் தனக்கென தனி ரசிகர் கூட்டதை வளர்த்துக் கொண்டார். நடிகர் அதர்வா தனது 32 வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

  பள்ளி மாணவன்

  பள்ளி மாணவன்

  பத்ரி வெங்கடேஷ் இயக்கிய 'பானா காத்தாடி' என்ற காதல் நாடகத்தில் அதர்வா பள்ளி மாணவனாக நடித்தார். இந்த படம் அதர்வாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததோடு மட்டும் அல்லாமல் விமர்சகர்கள் மற்றும் பல பிரபலங்களின் பாராட்டுக்களைப் பெற்றார். இப்படத்தில் அதர்வாவுடன் சமந்தா ஜோடி சேர்ந்திருந்தார். இருவரின் காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தது.

  மனநலம் பாதித்தவர்

  மனநலம் பாதித்தவர்

  அதர்வா தனது இரண்டாவது படத்தில் நேரடியான சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்தார். எல்ரெட் குமார் இயக்கிய இப்படத்தில் அமலா பால் அதர்வாவுககு ஜோடியாக நடித்தார், இந்த படத்தில் காதலும் பல திருப்பங்களும் நிறைந்து இருந்தன. இந்த படம் 100 நாள் வெற்றிகரமான திரையில் ஓடியது. இந்த படத்தில் அதர்வாவின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

  அப்பாவி இளைஞன்

  அப்பாவி இளைஞன்

  இதையடுத்து, பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் ஒரு அப்பாவியாக அடிமை வேடத்தில் நடித்தார். அதர்வா தனது அழகான தோற்றத்தை படத்தின் பாத்திரத்திற்காக அடியோடு மாற்றிக் கொண்டார். இது பார்வையாளர்களிடமிருந்து அவருக்கு அதிக பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார்.

  தடகள வீரர்

  தடகள வீரர்

  ரவி அரசு இயக்கிய 'ஈட்டி' என்ற விளையாட்டு மையமாக கொண்ட திரைப்படத்தில் ஒரு தடகள வீரராக நடிக்க சூப்பர் ஃபிட்டாக உடலமைப்பை மாற்றினார். காயத்தைத் தொடர்ந்து தடுத்து நிறுத்த முடியாத இரத்த ஓட்டம் என்ற அரிய நோய் உள்ளவராகவும் ,மேலும் ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடைய நாயகன் கதாபாத்திரத்தில் கட்சிதமாக நடித்து இருந்தார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்தார்.

  ATHARVAA ROMANCE பண்ணா பிடிக்கும் | ACTRESS DARSHINI & SAMEER CHAT | FILMIBEAT TAMIL
  காவல்துறை அதிகாரியாக

  காவல்துறை அதிகாரியாக

  சாம் அன்டன் இயக்கிய '100' என்ற அதிரடி திரைப்படத்தில் அதர்வா ஒரு காவலாராக நடித்தார். காவல்துறை கட்டுப்பாட்டு அறையில், பொதுமக்களின் புகார்களை பதிவு செய்யும் காவலராகிறார். பின்னர், அதர்வா தனது திறன்களை நிரூபிக்க பெண்களை கடத்தும் கும்பலை ரசியமாக பின்தொடர்ந்து அவர்களை கையும் களவுமாக பிடிக்கிறார். அதர்வா மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு அடுத்து அதர்வாவின் எந்த பாடங்களும் வெளியாகவில்லை. இன்னும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அதர்வாக மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.

  English summary
  Actor Atharvaa celebrates his 32nd birthday
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X