Don't Miss!
- News
பாஜகனா அட்வைஸ் தரலாமா? சிடி ரவிக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி.. ட்விட்டரில் கிளம்பிய மோதல்
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கசந்தது காதல்... பாடகியை மணந்த ஹீரோவுக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்!
சென்னை: நடிகர் 'வீரம்' பாலா- பாடகி அம்ருதாவுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது நீதிமன்றம்.
தமிழில், அன்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். பின்னர் மலையாள சினிமாவுக்குச் சென்ற அங்கு, முன்னணி நடிகராக இருக்கிறார்.

இந்நிலையில் 'வீரம்' படத்தில் அஜித் தம்பிகளுள் ஒருவராக நடித்தார். இந்தப் படத்தி இயக்கிய 'சிறுத்தை' சிவா இவரது அண்ணன்.
பாலாவும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவும் காதலித்து வந்தனர். பின்னர் 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிரார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்தனர். ஆரம்பத்தில் இதுபற்றி வெளியில் காட்டிக் கொள்ளாமலிருந்த இருவரும், எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றி எதையும் வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மனைவியை பிரிந்து விட்டதாக நடிகர் பாலா, அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த விவாகரத்து விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார் பாலா. இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. குழந்தி அவந்திகா, அம்மாவுடன் வளர்வார் என்று கூறப்பட்டுள்ளது.