»   »  'படத்துல தான் அப்படி நெஜத்துல நான் ரொம்ப நல்லவன்' ... பணிந்த பாலகிருஷ்ணா

'படத்துல தான் அப்படி நெஜத்துல நான் ரொம்ப நல்லவன்' ... பணிந்த பாலகிருஷ்ணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பெண்களை இழிவாக பேசிய விதத்திற்காக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பெண்களை முத்தமிட வேண்டும், இல்லையென்றால் கர்ப்பிணியாக்க வேண்டும் என்ற தத்துவத்தை அண்மையில் பாலகிருஷ்ணா உதிர்த்திருந்தார்.

இவரின் பேச்சுக்கு தொடர் எதிர்ப்புகள் எழுந்த சூழ்நிலையில் நான் ரொம்ப நல்லவன், என்று தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார் பாலகிருஷ்ணா.

Actor Balakrishna Apology for his Controversial Speech

பாலகிருஷ்ணா

தெலுங்கின் மூத்த நடிகர் என்றாலும் தனது படங்களில் காரம் குறையாமல் பஞ்ச் வசனங்கள் பேசுவதில் கைதேர்ந்தவர் பாலகிருஷ்ணா. ஆனால் சமீபத்திய விழா ஒன்றில் இவரின் பேச்சு பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது.

சாவித்திரி

அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். விழாவில் ஒரு பெண் பின்னால் கதாநாயகர் அலைவது போல் நான் நடித்தால் எனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு பெண்ணை பிடித்து இருந்தால் உடனே முத்தம் கொடுத்து விட வேண்டும். இல்லையேல் கர்ப்பிணியாக்கி விட வேண்டும். இதைத்தான் எனது ரசிகர்கள் விரும்புவார்கள் என்று சர்ச்சையாக பேசியிருந்தார்.

ரோஜா

பாலகிருஷ்ணாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும், என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா கண்டனம் தெரிவித்தார். மேலும் வக்கீல்கள் சிலரும் பாலகிருஷ்ணாவுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தனர்.

மன்னிப்பு

பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த பாலகிருஷ்ணா தற்போது தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் "நான் பெண்களை மதிப்பவன். நான் சினிமாவில் நான் எப்படி இருக்க வேண்டும் என்ற எனது ரசிகர்கள் எண்ணத்தைத்தான் வெளிப்படுத்தினேன். நிஜ வாழ்க்கையில் நான் அப்படி அல்ல. அப்படி எனது தந்தை என்னை வளர்க்கவில்லை. நான் கூறிய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.

English summary
A police Complaint has been Filed Against actor Balakrishna for his Derogatory Remarks Against Women. Now His says Apology for this Issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil