»   »  செல்ஃபி எடுத்த ரசிகரை சப்புன்னு அறைந்த நடிகர் பாலகிருஷ்ணா: வைரலான வீடியோ

செல்ஃபி எடுத்த ரசிகரை சப்புன்னு அறைந்த நடிகர் பாலகிருஷ்ணா: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை அறைந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரும், தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா நந்தியால் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

புதன்கிழமை இரவு பாலகிருஷ்ணாவை பார்த்த ரசிகர்களும், ஆதரவாளர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர்.

செல்ஃபி

செல்ஃபி

பாலகிருஷ்ணாவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். உடனே பாலகிருஷ்ணா கோபம் அடைந்து அந்த ரசிகரை அறைந்துவிட்டு கிளம்பினார்.

வைரல்

பாலகிருஷ்ணா தனது ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா ரசிகரை அறைந்ததை பார்த்து பலரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளனர். பாலகிருஷ்ணாவை கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

பாலகிருஷ்ணாவின் இந்த செயலை அவரது ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள். அவர் மன்னிப்பு கேட்கும் வரை அவரின் படங்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
Prominent actor and Telugu Desam Party MLA Nandamuri Balakrishna was caught on camera slapping a fan who was attempting to click a selfie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil