என்னது ஹார்ட் சிம்பள் கேட்டா.. டைமண்ட் காட்டுறாரு.. காதல் பரத்தா மாறாம இருந்தா சரி!

சென்னை: காதல் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பரத்தின் 50வது படமாக 'லவ்' திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் பரத் ஹார்ட்டீன் காட்ட சொல்ல டைமண்ட் ஷேப் காட்டிய வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத். செல்லமே படத்தில் வில்லனாக மிரட்டிய பரத் காதல் படத்தில் கதாநாயகனாக ஏகப்பட்ட ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

அதற்குள் நடிகர் பரத் தனது 50வது படமான லவ் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார். ஓடிடியில் வெளியான மிரள் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் பரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்து வருகிறார்.

காதல் டு லவ்

காதல் டு லவ்

2004ம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட இளம் பெண்களின் இதயத்தை பிடித்து இருப்பார் பரத். பிப்ரவரி 14, கண்டேன் காதலை என தொடர்ந்து காதலை சுற்றிய படங்களில் நடித்து வரும் பரத் தற்போது 'லவ்' படத்தில் நடித்துள்ளார்.

மீண்டும் வாணி போஜன்

மீண்டும் வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை நடிகையாக மாறி உள்ள வாணி போஜன் சிறு பட்ஜெட் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். பரத் உடன் மிரள் படத்தில் நடித்திருந்த வாணி போஜன் மீண்டும் பரத் உடன் இணைந்து இந்த லவ் படத்தில் செம ரொமாண்டிக்காக நடித்துள்ளார். இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரியும் பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

ஹார்ட்டீன் சிம்பிள்

ஹார்ட்டீன் சிம்பிள்

லவ் படத்தில் நடித்த நடிகர் பரத் அதன் டீசர் வெளியீட்டு விழாவில் படம் குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருந்தார். இந்த படத்தின் கதை ஒரு அப்பார்ட்மென்ட்டுக்கள் நடந்தாலும், திரைக்கதை ரொம்பவே பரபரப்பாக இருக்கும் என கூறினார். கடைசியில அவரிடம் போட்டோகிராபர்கள் ஹார்ட்டீன் சிம்பிள் காட்ட சொல்ல நடிகர் பரத்தும் ஹார்ட்டீன் சிம்பிள் காட்டினார்.

இது டைமண்ட் சிம்பிள்

இது டைமண்ட் சிம்பிள்

ஹார்ட்டின் சிம்பிளை நடிகர் பரத் தனது இரு விரல்களையும் மடக்கி வைத்தது போல காட்ட, ஆ இங்கே பூசு.. அங்கே பூசு என்பது போல அவரை சார் இந்த சைடு காட்டுங்க.. அந்த சைடு காட்டுங்க என அலைக்கழித்தனர். கடைசியில் ஒருத்தர் வேறுமாறி காட்டுங்க என்று சொன்னதுமே கடுப்பான பரத், போயான்னு சொல்லிட்டு உடனடியாக டைமண்ட் சிம்பிளை காட்டி விட்டார்.

காதல் பரத்தா ஆக்கிடாதீங்க

காதல் பரத்தா ஆக்கிடாதீங்க

பாவம் பரத் இப்போதான் மீண்டும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரை இப்படி கன்ஃபியூஸ் செய்து கடைசியில் காதல் பட கிளைமேக்ஸ் பரத் போல மாத்திடாதீங்க அவர் இன்னமும் லவ்வர் பாயாகவே நடிக்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க என ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

5 படங்கள்

கடைசியாக மிரள் படத்தில் நடித்த நடிகர் பரத் அடுத்ததாக லவ் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். மேலும், ஹண்ட், 8, யாக்கை திரி, முன்னறிவான், சமரா என ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதில், சில படங்கள் நீண்ட நாளாக கிடப்பில் கிடப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X