»   »  மீண்டும் வில்லனாக மாறும் பாபி சிம்ஹா!

மீண்டும் வில்லனாக மாறும் பாபி சிம்ஹா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பாபி சிம்ஹா தற்போது தெலுங்கில் ரீமேக்காகவிருக்கும் 'நேரம்' படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நேரம் மற்றும் ஜிகர்தண்டா படங்களில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர் பாபி சிம்ஹா. வில்லனாக நடித்து வந்த பாபி சிம்ஹா தற்போது முழுநேர நடிகராக மாறி விட்டார்.

இவரது கைவசம் தற்போது பாம்புச்சட்டை, இறைவி, கோ 2,மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன், கவலை வேண்டாம், திவ்யா மற்றும் கார்த்தி (பெங்களூர் டேஸ் ரீமேக்) மற்றும் அர்ஜுன் ஆகிய படங்கள் உள்ளன.

Actor Bobby Simha Play Villain Role Again

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான உறுமீன் திரைப்படம் மழையாக இருந்தபோதிலும் கூட ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது சந்தீப் கிஷன் - அனிஷா அம்ரோஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் நேரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கவிருக்கிறார் சிம்ஹா.

123 என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை அணில் கன்னேகந்தி இயக்க பிக்சல் ட்ரீம்ஸ் தயாரிக்கிறது. இந்த மாதத்தின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Actor Bobby Simha will Play Villain Role once Again in Neram Movie (Telugu Remake). The Movie Shooting will start from later this month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil