»   »  'அசால்ட் சேது'வுக்கு 32 வயசாச்சு பாஸ்!

'அசால்ட் சேது'வுக்கு 32 வயசாச்சு பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவுலகில் அசால்ட் சேது என்று அறியப்படும் பாபி சிம்ஹா இன்று தனது 32 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாபி சிம்ஹா தொடர்ந்து சூது கவ்வும், பீட்ஸா , நான் ராஜாவாகப் போகிறேன் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார்.

Actor Bobby Simha Turns 32

நேரம் படத்தில் இவர் நடித்த வட்டி ராஜா கதாபாத்திரம் யார் இந்த நடிகர் என்று கோலிவுட்டினரை திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து வெளியான ஜிகர்தண்டா இந்திய அளவில் இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஜிகர்தன்டாவில் அலட்டிக் கொள்ளாமல் அசால்ட் சேதுவாக நடித்து தேசிய விருதை அலேக்காக சொந்தமாக்கிக் கொண்டார் பாபி சிம்ஹா.

ஜிகர்தண்டா கொடுத்த அடையாளத்தால் தற்போது கோ 2, உறுமீன், உறுமீன், அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக், பாம்பு சட்டை, மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன் மற்றும் வீரா போன்ற படங்களில் முன்னணி வேடமேற்று நடித்து வருகிறார்.

இவருக்கும் இவருடன் உடன் நடித்த ரேஷ்மி மேனனுக்கும் நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் நடைபெறப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விரைவில் புது மாப்பிள்ளையாக மாறப் போகும் பாபி சிம்ஹா, தொடர்ந்து அசால்ட் சேது போன்ற வேடங்களை ஏற்று முத்திரை பதிக்க வேண்டும் என்று தட்ஸ்தமிழ் சார்பாக வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாபி சிம்ஹா!

English summary
Today Actor Bobby Simha Celebrating His 32nd Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous actor a wonderful birthday ahead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil