For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு

|
நடிகர் சார்லியின் சின்ன சின்ன ஆசை! | Actor Charlie

சென்னை: நடிகர் சார்லி தமிழ் ஸ்டுடியோவிற்காக நடிப்பு பயிற்சியை நடத்திக்கொடுக்க முன்வந்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கலைஞர். நடிகர்களில் முனைவர் பட்டம் பெற்றவர். நடிப்பின் அத்துணை நுட்பங்களையும் தெள்ளத் தெளிவாக எவ்வித புரியாத வார்த்தைகளும் இன்றி, மிக எளிமையாக நடிப்பை சொல்லித் தரக்கூடியவர். சார்லியின் பயிற்சிப்பட்டறை நிச்சயம் 90 சதவிகிதம் உங்களுக்கு திருப்தியான ஒன்றாகவே இருக்கும். இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். உடனே முன்பதிவு செய்யுங்கள்.

நண்பா நண்பா படத்திற்காக சார்லி பெற வேண்டிய தேசிய விருது, அந்த படத்தில் இன்னொரு துணை நடிகரான சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது. உண்மையில் இந்தியாவில் நடிப்பை சொல்லித்தரக்கூடிய நடிகர்களில் சார்லிக்கு மிக முக்கிய இடமுண்டு.

Actor Charle conduct training class about variety of Acting

நின்ற இடத்தில் அசாத்தியமாக பல்வேறு முகபாவனைகளை எப்படி கொண்டுவர இயலும் என்பதை கோட்பாட்டு ரீதியாக மட்டுமின்றி, செய்முறையிலும் அருமையாக சொல்லித்தருவார்.

நான் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், தமிழ் ஸ்டுடியோவில் எல்லாமும் இலவசமே. அப்படி ஒருமுறை சார்லியின் நடிப்பு பயிலரங்கு ஒன்று குறும்பட வட்டத்தில் இலவசமாக நிகழ்த்தப்பட்டது. அதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களே சார்லியின் நடிப்பு பயிற்சிக்கு சாட்சி.

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பிறகு சார்லி மீண்டும் தமிழ் ஸ்டுடியோவிற்காக நடிப்பு பயிற்சியை நடத்திக்கொடுக்க முன்வந்துள்ளார். அதுவும் தமிழ் ஸ்டுடியோவின் நிதிப்பிரச்சனையை சமாளிக்க ஒரு ரூபாய் கூட வேண்டாம், நானே கைக்காசு செலவு பண்ணி அரங்கிற்கு வந்து பயிற்சி கொடுத்துவிட்டு, பிறகு நானே வீடு திரும்பிக்கொள்கிறேன், எந்த வகையிலும் எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்றார்.

ஆனால் எனக்கு தெரியும், சார்லி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பயிற்சி கொடுக்கச் சென்றால் அவருக்கு குறைந்தது ஒரு லட்சம் வரை கொடுப்பார்கள். அவ்வளவு நடிப்பாற்றல் நிறைந்த அவர், தமிழ் ஸ்டுடியோவின் பணிக்காக முழுக்க முழுக்க பிசியான நேரத்தில், ஒரு முழு நாள் ஒதுக்கி நடிப்பு பயிற்சி கொடுக்க இருக்கிறார்.

நண்பர்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். உடனே முன்பதிவு செய்துவிடுங்கள், உள்ளத்தில் பெரும் நம்பிக்கையை விதைக்கக்கூடியவர் சார்லி. அதை நேரில் வந்து உணருங்கள்.

முன்பதிவு செய்ய: 044 48655405

நடிகர் சார்லி நடத்தும் நடிப்பு பயிற்சிப்பட்டறை

20-10-2019, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் இரவு 9 வரை

இடம்: சென்னை

பயிற்சியின் உட்தலைப்புகள்:

உணர்தல்

மனோநிலை பாகுபாடு

பாத்திரங்களுக்கு ஏற்ப உருமாறுதல்

குரல் வெளிப்பாடு (Voice Modulation)

உடல்மொழி வெளிப்பாடு

உடல் தோற்ற வெளிப்பாடு

நடிகர் சார்லி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கலைஞர். நடிகர்களில் முனைவர் பட்டம் பெற்றவர். நடிப்பின் அத்துணை நுட்பங்களையும் தெள்ளத் தெளிவாக எவ்வித புரியாத வார்த்தைகளும் இன்றி, மிக எளிமையாக நடிப்பை சொல்லித் தரக்கூடியவர்.

சார்லி சாப்ளினிடம் பாடம் கற்ற, பி.எஸ்.ராமாராவிடம் பாடம் பயின்றவர் நடிகர் சார்லி. ஒரு நடிகனுக்கான அடிப்படையில் இருந்து, நடிப்பின் எல்லாவிதமான நுட்பங்களையும் இந்த ஒரு நாள் பயிற்சியில் சொல்லித்தரவிருக்கிறார்.

நண்பர்களின் ஆதரவை பொறுத்து, இந்த பயிற்சி மேலும் இரண்டு நாள், ஒரு வாரம் என நீடிக்கவும் செய்யலாம். ஒரு பயிற்சியில் எல்லாரையும் திருப்திப்படுத்துவது கடினம். ஆனால் சார்லியின் பயிற்சிப்பட்டறை நிச்சயம் 90 சதவிகிதம் உங்களுக்கு திருப்தியான ஒன்றாகவே இருக்கும். இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். உடனே முன்பதிவு செய்யுங்கள்.

English summary
Actor Charle has come forward to conduct acting training for Tamil Studios. He is the best performer of Tamil cinema. Charle's workshop will surely make you 90 percent satisfied. Don't miss this opportunity. Make a reservation right away.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more