twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீக்கிரம் போய்ட்டீங்க.. ரொம்ப சீக்கிரம்.. கேவி ஆனந்த் திடீர் மரணம்.. நடிகர் தனுஷ் உருக்கம்!

    |

    சென்னை: இயக்குநர் கேவி ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கேவி ஆனந்த். சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜீவா என முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

    ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் அதிர்ந்து போன ஹாரிஷ் ஜெயராஜ்!ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் அதிர்ந்து போன ஹாரிஷ் ஜெயராஜ்!

    இயக்குநராக இருந்த போதும் மற்ற இயக்குநர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் கேவி ஆனந்த். அதோடு சிவாஜி, மாற்றான், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் கேவி ஆனந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மனைவி 2 மகள்கள்

    மனைவி 2 மகள்கள்

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு இயக்குநர் கே வி ஆனந்த் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு காலமானார். 54 வயதே ஆன கேவி ஆனந்துக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

    நேரடியாக மின் மயானம்

    நேரடியாக மின் மயானம்

    கொரோனா தொற்றுடன் கேவி ஆனந்த் மரணமடைந்ததால் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

    ஆம்புலன்ஸில் உடல்

    ஆம்புலன்ஸில் உடல்

    செல்லும் வழியில் அவரது வீட்டின் முன்பு ஆம்புலன்ஸிலேயே அவரது உடல் வைக்கப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்த அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியழுதனர்.

    உடல் தகனம்

    உடல் தகனம்

    பின்னர் பெசன்ட் நகர் மின்மயானத்தில் கேவி ஆனந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. இயக்குநர் கேவி ஆனந்த் கொரோனாவால் உயிரிழந்ததால் அவரது உடலுக்கு திரை பிரபலங்களோ பொதுமக்களோ அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

    நடிகர் தனுஷ் இரங்கல்

    நடிகர் தனுஷ் இரங்கல்

    இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் கேவி ஆனந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ரொம்ப சீக்கிரம்..

    அவர் பதிவிட்டிருப்பதாவது, ஒரு ஜென்டிலான நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். வாழ்க்கை முழுக்க அன்பும் சந்தோஷமும் நிறைந்த ஒரு இனிமையான மனிதர்.. கேவி ஆனந்த் சார் சீக்கிரம் போய்ட்டீங்க.. ரொம்ப சீக்கிரம்.. அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய இரங்கல்கள்.. அமைதியாக இளைப்பாருங்கள் கேவி சார் என பதிவிட்டுள்ளார்.

    நன்றியோடு இருப்பேன்

    இதேபோல் நடிகை அமைரா தஸ்தூரும் இயக்குநர் கேவி ஆனந்தின் மறைவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், கேவி ஆனந்த் சார் நீங்கள் மிகவும் ஆர்வமுள்ள மற்றும் ஒழுக்கமான திரைப்படத் இயக்குநர்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் என்னை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினீர்கள், அதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். எல்லாவற்றிற்கும் நன்றி சார்.. நீங்கள் இல்லாமல் சினிமா ஒரே மாதிரியாக இருக்காது. அமைதியில் ஓய்வெடுங்கள் சார் என பதிவிட்டுள்ளார்.

    அனேகன் படம்

    அனேகன் படம்

    இயக்குநர் கேவி ஆனந்த் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அமைரா தஸ்தூரை வைத்து அனேகன் படத்தை இயக்கினார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் த்ரில்லரான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Dhanush and actress Amyra Dastur condoles for director KV Anand demise. KV Anand directed the Anegan movie staring Dhanush and Amyra Dastur.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X