Don't Miss!
- Technology
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- News
"அதிமுகவினர் எல்லாரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது" - சசிகலா
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரசிகர்களை கவர்ந்த தனுஷின் நெகட்டிவ் கேரக்டர்.. மேக்கிங் வீடியோ மிரட்டுது பாருங்க!
சென்னை : திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷின் நானே வருவேன் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது.
தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்தப் படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிகர் தனுஷ் நடித்திருந்த நிலையில், வில்லன் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
50
நாள்
கொண்டாட்டத்தில்
திருச்சிற்றம்பலம்
படம்..
ஃபீல்
குட்
மூவி..
ரசிகர்கள்
கமெண்ட்!

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகின்றன. ஒருசில படங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் அந்தப் படங்களில் தனுஷின் நடிப்பு எப்போதும் வரவேற்பை பெற்று விடுகிறது. படம் எப்படிப்பட்ட விமர்சனங்களை கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பு மூலம் படத்திற்கு நியாயம் செய்து விடுகிறார் தனுஷ்.

100 கோடி ரூபாய் கிளப்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தனுஷ் ரசிகர்களை கவர்ந்தது.

50 நாட்கள் வெற்றிக் கொண்டாட்டம்
இந்தப்
படம்
இன்றைய
தினம்
50
நாட்களை
திரையரங்குகளில்
கடந்து
வெற்றிகரமாக
ஓடி
வருகிறது.
இதனிடையே
தனுஷின்
நானே
வருவேன்
படமும்
கடந்த
மாதம்
29ம்
தேதி
திரையரங்குகளில்
வெளியாகி
ரசிகர்களை
உற்சாகப்படுத்தியது.
தனுஷ்
மற்றும்
அவரது
அண்ணன்
செல்வராகவன்
இணைந்திருந்த
இந்தப்
படம்
அதிகமான
எதிர்பார்ப்புகளுடன்
வெளியானது.

கலவையான விமர்சனங்கள்
பொன்னியின் செல்வன் படத்துடன் மோதிய இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. முதல் பாதியில் சிறப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை அணுகிய செல்வராகவன், இரண்டாவது பாதியில் இது செல்வராகவன் படமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன.

ரசிகர்களை மிரட்டிய கதிர்
இந்தப் படத்திற்கான கதை, திரைக்கதையை தனுஷ் எழுதியிருந்த நிலையில், செல்வராகவன் படத்தினை இயக்கியிருந்தார். படத்தில் பிரபு மற்றும் கதிர் என இருவேறு கேரக்டர்களில் தனுஷ் ஹீரோவாகவும் வில்லனாகவும் தனது நடிப்பால் வித்தியாசம் காட்டியிருந்தார். குறிப்பாக கதிர் என்ற வில்லன் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக மிரட்டியுள்ளது.

மேக்கிங் வீடியோ வெளியீடு
இந்தக் கேரக்டர் ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில், தனுஷ் தொடர்ந்து இதுபோன்ற வில்லன் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தக் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ள காட்சிகளின் மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

காட்டுப்பகுதிகளில் சூட்டிங்
இந்த வீடியோவில் காட்டுப்பகுதிகளில் எப்படி படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட காட்சிகள் உள்ளன. குறிப்பாக தனுஷின் வில்லன் கெட்டப்பிற்காகவும் அதன் காட்சிகளுக்காகவும் எப்படி படக்குழு மெனக்கெட்டுள்ளது என்பது குறித்து காட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த மேக்கிங் வீடியோ மிரட்டுகிறது.