Don't Miss!
- News
அப்பவே "அரசியலமைப்பு" இருந்திருக்கு! தமிழ்நாடு உத்திரமேரூர் கல்வெட்டு! புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பாலிவுட்டில் அடித்து தூக்கும் தனுஷின் படங்கள்… மனுஷன் வேறலெவல்!
சென்னை : பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் மாஸ்காட்டி வருகிறார் தனுஷ். இதனால், உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் தனுஷ்.
ஹிந்தியில் வெளியிடப்பட்ட தனுஷின் மாரி 2 மற்றும் அசுரன் திரைப்படங்களை யூடியூப்பில் மட்டும் சுமார் 20 கோடி பேர் பார்த்துள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 3… அவரை மாத்துங்க … ஆரம்பமே சர்ச்சையா?
தமிழில் இருந்து ஹிந்தியில் டப் செய்யப்பட்ட அவரின் படங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

தனுஷ்
தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுசைப்பார்த்த போது, யாருப்பா இந்த பையன் என்றும், யார் யார் நடிகராகனும்னு ஒரு விவஸ்தை வேணாமா? என்று கேட்டு பலர் விமர்சித்து இருப்பார்கள். ஆனால், வந்த விமர்சனங்களை அதே புன்னகை மாறாமல் ஏற்றுக்கொண்டார் தனுஷ்.

மிரட்டினார்
காதல் கோட்டை திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தீவ்யா.. தீவ்யா... தீவ்யா என்று மழையில் ஆட்டம் போட்டது, அந்த படத்தையே தூக்கி நிறுத்தியது எனலாம். விமர்சனம் செய்தவர்களுக்கு தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் பதிலளித்தார்.

கவனம் பெற்றார்
பொல்லாதவன், ஆடுகளம்,வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, தங்கமகன் போன்ற திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்தார். நடிகர், இயக்குநர், பாடகர், கதாசிரியர் என சகலத்திலும் மாஸ்காட்டி வருகிறார். வொய் திஸ் கொலவெறி பாடலை பாடி உலகம் முழுவதும் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.

யூடியூப்பில் டிரெண்டிங்க
இந்நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடித்த மாரி 2 திரைப்படம் ஹந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிட்டப்பட்டது. யூடியூப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தை இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. அதில் சுமார் 13 லட்சம் பேர் மாரி2 படத்தை லைக் செய்துள்ளனர்.

இந்தியில் அமோக வரவேற்பு
இதேபோல் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியாகி தேசிய விருது வென்ற அசுரன் திரைப்படத்துக்கும் இந்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூப்பில் இருக்கும் இந்த திரைப்படம் இதுவரை 5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளையும், சுமார் 7 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாத்தி
இப்போது தனுஷ் மாறன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். மேலும், அடுத்ததாக இரண்டு ஹிந்தி படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.