Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குட்டி ஸ்டோரி சொன்ன தனுஷ்.. அப்பா போலவே வேட்டி சட்டையில் வந்த மகன்கள்.. இசை வெளியீட்டில் சுவாரஸ்யம்!
சென்னை : நடிகர் தனுஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆகஸ்ட் 18ல் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது திருச்சிற்றம்பலம் படம்.
Recommended Video
இந்தப் படத்தில் தனுஷிற்கு 3 ஜோடிகள். நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் அவருக்கு படத்தில் ஜோடியாகியுள்ளனர்.
இந்தப் படத்தின் தாய் கிழவி உள்ளிட்ட 4 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
செஞ்சிருவேன்னு
டயலாக்
சொல்றது
மாஸ்
இல்ல..
அப்ப
எது
மாஸ்..
தனுஷ்
சொல்லியிருக்கறத
பாருங்க!

திருச்சிற்றம்பலம் படம்
நடிகர் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மித்ரன் ஜவஹர் படத்தை இயக்கியுள்ளார். நேற்றைய தினம் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.

ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி
இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை போலவே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. நிகழ்ச்சியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்திருந்தது. ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரெட் கார்ப்பெட் எல்லாம் போடப்பட்டிருந்தது.

வீல் சேரில் வந்த நித்யா மேனன்
நிகழ்ச்சியில் தனுஷ், அனிருத், நித்யா மேனன், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நித்யா மேனனுக்கு காலில் அடிபட்டிருந்த நிலையில் அவர் வீல் சேரில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். மிகவும் அழகாக காணப்பட்டார்.

தனுஷ் போட்ட ஆர்டர்
காலில் அடிபட்ட நிலையில் ஏன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்துக் கொள்ள வேண்டும் என்று தனுஷ் ஆர்டர் போட்டதாகவும், ஆனால் இந்தப் படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்பதும் ஒரு காரணம் என்று அவர் கூறியிருந்தார்.
|
இசைக்கச்சேரி நடத்திய தனுஷ் -அனிருத்
இந்த நிகழ்ச்சியில் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து மேடையில் இசைக்கச்சேரி நடத்தினர். இருவரும் வேட்டி சட்டையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே தனுஷின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவும் நிகழ்ச்சியில் வேட்டி சட்டையுடன் கலந்துக் கொண்டனர். இதில் யாத்ரா, தன்னுடைய தந்தையை அப்படியே பிரதிபலித்தார்.

வரவேற்பு பெற்ற பாடல்கள்
இந்தப் படம் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வெளியாகும் தனுஷ் படம். இதேபோல நேற்றைய ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் தேன்மொழி, தாய்கிழவி உள்ளிட்ட 3 பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார் தனுஷ். ஒரு பாடலுக்கு விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

அப்பா குறித்து குட்டி ஸ்டோரி
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், தன்னுடைய தந்தை ஆரம்ப காலத்தில் சென்னைக்கு வந்தபோது பட்ட கஷ்டங்களை குட்டி ஸ்டோரியாக சொன்னார். தன்னை ஹீரோவாக்க நள்ளிரவிலும் சென்று கடன் வாங்கி அவர் பட்ட வேதனைகளை பகிர்ந்த தனுஷ், அவர் தன்னுடைய ரியல் ஹீரோ என்று நெகிழ்ச்சித் தெரிவித்தார்.

வடசென்னை குறித்து அப்டேட்
அசுரன், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் தனுஷுடன் இணைந்து பணியாற்றியுள்ள இயக்குநர் வெற்றிமாறன், நிகழ்ச்சியில் பேசியபொழுது ரசிகர்கள் வடசென்னை 2 குறித்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து விடுகதை, வாடி வாசல் படங்களை தொடர்ந்து இந்தப் படத்தின் வேலைகளை துவங்கவுள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பு
மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை விரைவில் சன் டிவி ஒளிபரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை அடுத்து திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் ஆடியோ வெளியீடு உள்ளிட்டவற்றை தொடர்ந்து ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் வைத்திருந்தனர்.

ரெட் கார்ப்பெட் வரவேற்பு
நடிகைகள் ராஷி கண்ணா, நித்யா மேனன், இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், அவர்களுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பு அளிக்கப்பட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பார்த்தவுடன் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் கட்டியணைத்து வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.