twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலு சார் ஆபிஸ்ல பார்க்கும் போது இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கல.. வெற்றிமாறனுக்கு தனுஷ் நன்றி!

    |

    சென்னை: தேசிய விருது கிடைத்ததற்காக நடிகர் தனுஷ் பலருக்கும் நன்றி தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நெட்பிளிக்ஸின் தி கிரேமேன் படத்திற்காக அமெரிக்காவில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் தனுஷ், தூங்கி எழுந்ததும் இப்படியொரு சந்தோஷ செய்தியை கேட்டு மகிழ்ந்தேன் எனக் கூறியுள்ளார்.

    தனது தாய், தந்தை, அண்ணன் தொடங்கி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

    தேசிய விருது நாயகன்

    ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து அசுரன் படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் தட்டிச் சென்றுள்ளார். அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில், பலருக்கும் நன்றி தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஓம் நமச்சிவாயா என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

    அண்ணனுக்கு நன்றி

    அண்ணனுக்கு நன்றி

    அம்மா, அப்பா மற்றும் தனது முதல் குருவும் அண்ணனுமான இயக்குநர் செல்வராகவனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் தனுஷ். ஒரு நடிகனாக தன்னை மாற்றியதே இயக்குநரும் அண்ணனுமான செல்வராகவன் தான் என்பதை எப்போதும் மறக்காமல் குருவாகவே தனது அண்ணனை பார்த்து வருகிறார் தனுஷ்.

    சிவசாமி கதாபாத்திரம்

    சிவசாமி கதாபாத்திரம்

    எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்திற்கும் அதில் சிவசாமியாக வாழ்ந்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ள நிலையில், சிவசாமியாக தன்னை மாற்றிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி எனக் கூறியுள்ளார் தனுஷ்.

    பாலுமகேந்திரா சார் ஆபிஸ்

    பாலுமகேந்திரா சார் ஆபிஸ்

    மேலும், இயக்குநர் வெற்றிமாறனை முதன் முறையாக பாலுமகேந்திரா சார் ஆபிஸில் பார்க்கும் போது, இப்படி இருவரும் இணைந்து பயணிப்போம் என்றும் தனக்கு ஒரு நண்பனாகவும் சகோதரனாகவும் இயக்குநர் வெற்றிமாறன் மாறுவார் என்றும், ஒரு முறைக்கு இரு முறை எனக்கு தேசிய விருதுகளை வாங்கித் தருவார் என்றும் தான் நினைக்கவே இல்லை என உருக்கத்தோடு வெற்றிமாறனுக்கு தனது அன்பான நன்றியை தெரிவித்துள்ளார் தனுஷ்.

    அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன்

    அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன்

    அதுமட்டுமின்றி, தனக்காக அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் என்ன கதையை உருவாக்கி வருகிறார் என்பதை கேட்கவே காத்திருக்கிறேன் என்றும் தனது நன்றி கடிதத்தில் அடுத்த தேசிய விருதுக்கான கோரிக்கையை சேர்த்தே வைத்துள்ளார் நடிகர் தனுஷ். வாடிவாசல் படத்துக்கு பின்னர் மீண்டும் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    எனை தாங்கும் தூண்கள்

    எனை தாங்கும் தூண்கள்

    இயக்குநர் வெற்றிமாறனை தொடர்ந்து வா அசுரா போன்ற பாடலை கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார், அசுரன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர், கென் கருணாஸ் மற்றும் டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ள நடிகர் தனுஷ், தன்னை எப்போதுமே தாங்கிப் பிடிக்கும் தூண்களான தனது ரசிகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

    வாளெடுத்து வரும் கர்ணன்

    வாளெடுத்து வரும் கர்ணன்

    இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது. அசுரன் படத்தைத் தொடர்ந்து கர்ணன் படத்திற்காகவும் தேசிய விருதுகளை தனுஷ் குவிப்பார் என தமிழ் சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    English summary
    Actor Dhanush who won best actor National Award for Asuran movie thanked Vetrimaaran for gave Sivasami character.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X