»   »  பிச்சை எடுத்த காதல் பட நடிகரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்ற நடிகர் தீனா

பிச்சை எடுத்த காதல் பட நடிகரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்ற நடிகர் தீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நடிகர் பல்லு பாபுவை நடிகர் சாய் தீனா மீட்டு அழைத்துச் சென்றுள்ளார்.

பாலாஜி சக்திவேலின் காதல் ஹிட் படத்தில் விருச்சிக காந்தாக நடித்தவர் பல்லு பாபு. நடிச்சா ஹீரோ தான் சார், அப்புறம் அரசியல் சிஎம், பிஎம் என்ற ஒரே வசனம் மூலம் பிரபலம் ஆனார்.

சினிமா வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அவர் தாய், தந்தை இறந்த பிறகு சென்னை சூளைமேட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

தீனா

பாபு பிச்சை எடுக்கும் செய்தியை பார்த்துவிட்டு நடிகர் சாய் தீனா பாபுவை மீட்டு அழைத்துச் சென்றுள்ளார். பாபுவுடன் தீனா இருக்கும் வீடியோவை இயக்குனர் மோகன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பாபு

பாபு

காதல் பட நடிகர் கோவிலில் பிச்சை எடுக்கிறாரா, விஷால் எங்கய்யா கூப்பிடுங்க. பாபுவை மீட்டு மறுவாழ்வு தருவாரா விஷால் என்று ஆளாளுக்கு கேட்ட நிலையில் அவரை காப்பாற்றியுள்ளார் தீனா.

வாழ்க்கை

வாழ்க்கை

மோகனும், தீனாவும் இரண்டு நாட்களாக பாபுவை தேடி அலைந்து கண்டுபிடித்துள்ளனர். இனி பாபுவை தீனா தான் பார்த்துக் கொள்ளப் போகிறார் என்று மோகன் தெரிவித்துள்ளார். அவருக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க உதவி செய்யப் போகிறார்களாம் மோகனும், தீனாவும்.

உதவி

உதவி

பாபுவுக்கு பட வாய்ப்பு கொடுத்து உதவி செய்ய நினைத்தால் என்னையோ, தீனா அண்ணனையோ அணுகலாம் என்று மோகன் தெரிவித்துள்ளார். எனக்கு பட வாய்ப்பு கொடுக்கண்ணா என்று பாபு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.

சினிமா

சினிமா

பாபுவின் நிலை குறித்து பேப்பரில் பார்த்துவிட்டு அவரை அழைத்து வந்துள்ளோம். காதல் படத்தில் ஒரேயொரு வசனம் மூலம் தாக்கம் ஏற்படுத்தியவர். மீண்டும் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்க அழைத்து வந்துள்ளோம் என்கிறார் தீனா.

English summary
Actor Sai Dheena and director Mohan have rescued actor Babu of Kadhal fame. He was found begging in front of a temple in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil