»   »  பாவனா கடத்தல் வழக்கு... நடிகர் திலீப்தான் குற்றவாளியா?

பாவனா கடத்தல் வழக்கு... நடிகர் திலீப்தான் குற்றவாளியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல நடிகை பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

பல்வேறு தரப்பிலிருந்தும் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் திலீப்பை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கேரள டிஜிபி லோக்நாத்பெக்ரா தெரிவித்துள்ளார்.

Actor Dileep in big trouble

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முதலில் பணம் கேட்டு மிரட்டுவதற்காகவே பாவனா கடத்தல் நடந்ததாக பல்சர் சுனில் தெரிவித்தார். பிறகு பாவனா கடத்தல் பின்னணியில் ஒரு பிரபல நடிகருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்ததால் அந்த நடிகர் திலீப்பாக இருக்கும் என தகவல் பரவியது,

பல்சர் சுனில் இந்த வழக்கில் தனது பெயரை போலீசாரிடம் சொல்லாமல் இருக்க ரூபாய் ஒன்றரை கோடி கேட்டு மிரட்டியதாக நடிகர் திலீப் போலீசில் புகார் கொடுத்தார்.

இதைதொடர்ந்து நடிகர் திலீப் அவரது நண்பரும் டைரக்டருமான நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடம் போலீசார் ஏற்கனவே 13 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக மீண்டும் பொறுப்பேற்று உள்ள லோக்நாத்பெக்ரா இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டு உள்ளார்.

இந்த சூழலில் திலீப்பின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்குச் சொந்தமான ஒரு கடையில் பணியாற்றும் நபரிடம் பாவனா பலாத்கார வீடியோ அடங்கிய மெமரி கார்ட் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பல்சர் சுனில் தெரிவித்ததால், மீண்டும் நடிகர் திலீப் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்.

பல்சர் சுனில் பாவனாவைக் கடத்தும் முன், பின் பேசிய செல்போன் எண்களை ஆராய்ந்த போது, அதில் அதிக முறை திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்குப் பேசியது அம்பலமாகியுள்ளது.

இது திலீப்பை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.

English summary
Kerala Police have decided to interrogate leading actor Dileep in actress Bhavana abduction case

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil