»   »  பாவனா கடத்தலில் தொடர்பா....? மறுக்கிறார் நடிகர் திலீப்!

பாவனா கடத்தலில் தொடர்பா....? மறுக்கிறார் நடிகர் திலீப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை பாவனா கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்குத் தொடர்பில்லை என நடிகர் திலீப் மறுத்துள்ளார்.

நடிகை பாவனா கடத்தல் விவகாரம் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அவரைக் கடத்தியவர்களை இயக்கியது ஒரு பிரபல நடிகரும், இரு அரசியல் தலைவர்களின் வாரிசுகள் என்றெல்லாம் தகவல்கள் கசிந்ததால் அந்த விஐபிகள் யாராக இருக்கும் எனக் கேட்க ஆரம்பித்துவிட்டனர் பொது மக்கள்.

Actor Dileep denies his role in actress abduction case

மீடியாவில் யூகமாக சில நடிகர்களின் பெயர்கள் வர ஆரம்பித்தன. இந்தக் கடத்துக்கு பேரமாக ரூ 50 லட்சம் வரை பேசப்பட்டதாக போலீசால் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இந்த நிலையில் பாவனா கடத்தலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மலையாள முன்னணி நடிகர் திலீப் கூறியுள்ளார். இந்த சம்பவம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாவனா கடத்தலைக் கண்டித்து நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் திலீப் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Dileep has denied his role in actress abduction & molestation case

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil