»   »  ரூ.1.5 கோடி கொடுக்காவிட்டால் 'அந்த' மேட்டரை சொல்லிடுவேன்: நடிகருக்கு போன் மூலம் மிரட்டல்

ரூ.1.5 கோடி கொடுக்காவிட்டால் 'அந்த' மேட்டரை சொல்லிடுவேன்: நடிகருக்கு போன் மூலம் மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ரூ. 1.5 கோடி பணம் கேட்டு தனக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகர் திலீப்.

பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அவரை கடத்தி அசிங்கப்படுத்தச் சொன்னது மலையாள நடிகர் திலீப் தான் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அந்த கிசுகிசு இன்னும் அடங்கியபாடில்லை.

மிரட்டல்

மிரட்டல்

நடிகையை கடத்திய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியின் நண்பர் விஷ்ணு நடிகர் திலீப்புக்கு போன் போட்டுள்ளார். அவர் போனை எடுக்கவில்லை.

பணம்

பணம்

திலீப் போனை எடுக்கவில்லை என்றவுடன் அவரின் நண்பரும், இயக்குனருமான நாதிர்ஷாவுக்கு போன் போட்டுள்ளார் விஷ்ணு. நடிகர் திலீப் எனக்கு ரூ.1.5 கோடி தராவிட்டால் நடிகையின் விஷயத்தில் அவருக்கு தொடர்பு என்று வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

போலீஸ்

போலீஸ்

நாதிர்ஷா அந்த போன் அழைப்பை பதிவு செய்து திலீப்பிடம் அளித்தார். இதையடுத்து திலீப் நாதிர்ஷாவுடன் சென்று காவல் நிலையத்தில் விஷ்ணு மீது புகார் அளித்துள்ளார்.

வழக்கு

வழக்கு

திலீப்பின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Malayalam actor Dileep filed a police compalint after he received a blackmail phone call demanding Rs. 1.5 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil