»   »  நடிகர் திலீப்பின் மேனேஜர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

நடிகர் திலீப்பின் மேனேஜர் தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பின் மேனேஜரான அப்புன்னி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நடிகை பாவனாவை கடத்தி, மானபங்கப்படுத்தி அவரை நிர்வாணமாக புகைப்படம், வீடியோ எடுக்க மலையாள நடிகர் திலீப் பல்சர் சுனிக்கு ரூ. 1.5 கோடி கொடுத்துள்ளார்.

Actor Dileep's manager absconding

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் கைதான நிலையில் அவரது மேனேஜரும், டிரைவருமான அப்புன்னி தலைமறைவாகிவிட்டார்.

பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி சிறையில் இருந்து கொண்டே அப்புன்னிக்கு போன் செய்து பேசியுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை அப்புன்னி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வர வேண்டும். ஆனால் அவர் வரவில்லை.

போலீசார் அவரை வலைவீசித் தேடி வருகிறார்கள். அப்புன்னி சிக்கினால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dileep's Shocking Statement About Actress And Pulsar Suni | Oneindia Malayalam
English summary
Kerala police said that actor Dileep's manager Appunni is absconding for the past two days.
Please Wait while comments are loading...