»   »  பஸ்ஸில் பயணம் செய்து 'கிட்னி நோயாளிக்கு' நிதி திரட்டிய திலீப்!

பஸ்ஸில் பயணம் செய்து 'கிட்னி நோயாளிக்கு' நிதி திரட்டிய திலீப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கிட்னி நோயாளி ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக நடிகர் திலீப் பேருந்தில் பயணம் செய்து நிதி திரட்டியிருக்கிறார்.

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் தன்னால் முடிந்த சமூக உதவிகளையும் அக்கறையுடன் செய்து வருகிறார். வீடில்லாத ஆதரவற்ற பெண்களுக்கு 1௦௦௦ வீடுகளை கட்டிக் கொடுப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்.

Actor Dileep Travel in Local Bus

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னி ஜார்ஜ் என்னும் இளைஞரின் கிட்னி அறுவை சிகிச்சைக்காக, திலீப் செய்த காரியம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

உன்னி ஜார்ஜின் அம்மாவே அவருக்கு கிட்னி தானம் செய்ய முன்வந்தும் அதற்கான அறுவைசிகிச்சைக்கு மட்டும் 10 லட்ச ரூபாய் தேவைப்படுகிறதாம்.

இதற்காக கேரளாவைச் சேர்ந்த மாணவர் அமைப்பு ஒன்று மும்முரமாக இறங்கி நிதி திரட்டியும், போதுமான பணத்தை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை.

இதைக் கேள்விப்பட்ட நடிகர் திலீப் தனது பங்காக ஒரு தொகையைக் கொடுத்திருக்கிறார். இதுதவிர கேரளா எம்.எல்.ஏ ஹிபி ஈடனுடன் இணைந்து பேருந்தில் பயணம் செய்தும் நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறார்.

English summary
Actor Dileep raised funds for a Kidney patient surgery.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil