twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கின்னஸ் சாதனை இயக்குநர், மகேஷ் பாபுவின் சித்தி விஜய நிர்மலா மாரடைப்பால் மரணம்

    By Siva
    |

    ஹைதராபாத்: பிரபல நடிகையும், இயக்குநருமான விஜய நிர்மலா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தவர் விஜய நிர்மலா. மேலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர்.

    Actor, director Vijaya Nirmala no more

    விஜய நிர்மலா படங்களை இயக்க மட்டும் இல்லை தயாரிக்கவும் செய்தார். ஹைதராபாத்தில் தனது கணவரும், நடிகருமான கிருஷ்ணாவுடன் வசித்து வந்த அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

    தனது கணவர் கிருஷ்ண மூர்த்தி இறந்த பிறகு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான கிருஷ்ணாவை திருமணம் செய்தார். விஜய நிர்மலா தெலுங்கில் மட்டும் 40 படங்களை இயக்கியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை இயக்கியது இரண்டு பெண்கள். அதில் ஒருவர் சாவித்ரி மற்றொருவர் விஜய நிர்மலா.

    Actor, director Vijaya Nirmala no more

    சென்னையில் பிறந்தவர் விஜய நிர்மலா. அவரின் தந்தை படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு வந்தார். 1950ம் ஆண்டு வெளியான மச்ச ரேகை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய நிர்மலா. அப்பொழுது அவருக்கு வயது 7.

    விஜய நிர்மலாவுக்கு முதல் திருமணம் மூலம் நரேஷ் என்கிற மகன் உள்ளார். சாக்ஷி(1967) பட செட்டில் தான் விஜய நிர்மலா கிருஷ்ணாவை சந்தித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து 47 படங்களில் நடித்துள்ளனர். சாக்ஷி படம் மூலம் தான் விஜய நிர்மலாவுக்கு படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    படங்களை இயக்கியதோடு மட்டும் அல்லாமல் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார் அவர். அவரின் மறைவு செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    மேலும் ரசிகர்கள் பலரும் விஜய நிர்மலாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் #RIPVijayaNirmalaGaru என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

    English summary
    Actor cum director Vijaya Nirmala passed away in Hyderabad. She was 73.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X