»   »  காதலர் தினத்தன்று பிரபல நடிகருக்கு நிகழ்ந்த சோகம்... உருக்கமான பதிவு!

காதலர் தினத்தன்று பிரபல நடிகருக்கு நிகழ்ந்த சோகம்... உருக்கமான பதிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலர் தினத்தன்று விவாகரத்து: யுதன் பாலாஜி

சென்னை : 'கனா காணும் காலங்கள்' மூலம் பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. அதன் பிறகு அவர் நடித்த 'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்' போன்ற படங்களும் பிரபலம்.

தற்போது அவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அதுவும் காதலர் தினமான நேற்றுதான் கோர்ட்டில் அவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து கொடுத்துள்ளனர்.

திருமணம் நடந்து இரண்டு வருடமே ஆன நிலையில் இப்படி இருவரும் பிரிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள்

விஜய் டி.வியில் 2006 முதல் 2008-ம் ஆண்டு வரை ஹிட்டடித்த சீரியல் 'கனா காணும் காலங்கள்'. இரண்டு பாகங்களுமே இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியல்களில் நடித்த பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் பின்னாட்களில் பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்து ஹிட் ஆனார்கள்.

பட்டாளம் ஹீரோ

பட்டாளம் ஹீரோ

'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் பிரபலமான யுதன் பாலாஜி, அதன்பிறகு 'பட்டாளம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பிறகு,'காதல் சொல்ல வந்தேன்', 'வசந்த குமாரன்', 'நகர்வலம்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

பிரீத்தி என்பவரோடு திருமணம்

பிரீத்தி என்பவரோடு திருமணம்

இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சுமூகமாக பிரிவதென முடிவெடுத்தார்கள். இவர்களது விவாகரத்து வழக்கு சில மாதங்களாக நடைபெற்று வந்திருக்கிறது.

விவாகரத்து

விவாகரத்து

இந்நிலையில், நேற்று இவர் விவாகரத்து பெற்றுள்ளார். இந்தத் தகவலை யுதன் பாலாஜி தன் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமணம் நடந்து இரண்டு வருடமே ஆன நிலையில் இப்படி இருவரும் பிரிந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடவுளின் வித்தியாசமான பிளான்

கடவுளின் வித்தியாசமான பிளான்

"எல்லோரும் இந்த காதலர் தினத்துக்கு என்ன பிளான் எனக் கேட்கிறீர்கள். ஆனால், கடவுள் எங்களுக்கு வித்தியாசமான பிளானை செயல்படுத்தியுள்ளார். வழக்கம்போல எழுந்தேன்... உயர்நீதிமன்றத்திற்குச் சென்றேன். அங்கு எங்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

ஆம், இப்போது நாங்கள் பிரிந்தது அதிகாரப்பூர்வமாகியிருக்கிறது. நாங்கள் இருவரும் பிரச்னையில்லாமல் சுமூகமாக பிரிந்திருக்கிறோம். எல்லோருக்கும் மகிழ்ச்சியான காதலர் தின வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

English summary
Actor Yuthan Balaji is famous for 'Kana Kaanum kaalangal'. After that, he has acted in films like 'pattalam' and 'kaadhal solla vandhen'. Now He has divorced her wife preethi . On Valentine's Day, he got divorce from his wife on high court.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil