twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைக்கதை எழுதவே ஒரு வருஷமாச்சு..பொன்னியின் செல்வன் பட சுவாரசியத்தை பகிர்ந்த இளங்கோ குமரவேல்!

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுத மட்டுமே ஓரு வருடமானதாக நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான இளங்கோ குமரவேல் தெரிவித்துள்ளார்.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் செப்டம்பர்30ந் தேதி வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

    தமிழ்நாட்டில் அதிவேகமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், உலகளவில் வேகமாக ரூ.400 கோடி வசூலித்த தமிழ் படம் என்கிற சாதனையையும் நிகழ்த்தி காட்டி உள்ளது.

    ப்பா.. என்ன அழகு.. இமிடியேட்டா ஆர்மி ஆரம்பிச்சிடுவாங்களே.. பிக் பாஸ் 6 போட்டியாளர் யாரு இந்த ஆயிஷா! ப்பா.. என்ன அழகு.. இமிடியேட்டா ஆர்மி ஆரம்பிச்சிடுவாங்களே.. பிக் பாஸ் 6 போட்டியாளர் யாரு இந்த ஆயிஷா!

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    புத்தக பிரியர்கள் அனைவரும் ரசித்து ரசித்து படித்த ஒருவரலாற்று நாவல் பொன்னியின் செல்வன். எம்ஜிஆர், கமல்ஹாசன் திரைப்படமாக எடுக்க ஆதைபட்டு நிறைவேறாமல் போனதை மணிரத்னம் நீண்ட முயற்சிக்கு பிறகு உயிர்கொடுத்து இருக்கிறார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கு கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

    மாஸ் காட்டும் படம்

    மாஸ் காட்டும் படம்

    பொன்னியின் செல்வன் படம் வெளியானதில் இருந்து படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நந்தினி யார், ராஜா ராஜ சோழன் வரலாறு, குந்தவை என பலர் பற்றிய சுவாரசியத் தகவல்களை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் தேடி தேடி படித்து வருகின்றனர். விக்ரம்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா,ஜெயம் ரவி, கார்த்தி என கதாபாத்திர தேர்வும் சிறப்பாக அமைந்துள்ளதால் படமும் மிரட்டலாக உள்ளது.

    பேசி முடிவு செய்தோம்

    பேசி முடிவு செய்தோம்

    இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதிய நடிகரும், எழுத்தாளருமான இளங்கோ குமரவேல் இப்படம் குறித்து பல சுவாரசியத் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், பொன்னியின் செல்வன் படத்தை ஒரே பாகமாக எடுக்கலாம் என்று தான் மணிரத்னம் நினைத்திருந்தார். ஆனால், நானும் மணிரத்னமும் இணைந்து பேசிய பிறகு தான் இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்தோம்.

    2018ம் ஆண்டு தொடங்கியது

    2018ம் ஆண்டு தொடங்கியது

    நான் ஆரம்பகாலக்கட்டத்தில் பொன்னியின் செல்வன் நாவலை நாடகமாக அரங்கேற்றியிருக்கிறேன். அதன்மூலம் தான் இந்தப் படத்தில் திரைக்கதையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 2018 அக்டோபரில் படத்திற்கு திரைக்கதை எழுத தொடங்கினோம். திரைக்கதை எழுத மட்டுமே கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தேவைப்பட்டது.

    சவாலாக இருந்தது

    சவாலாக இருந்தது

    இப்படத்திற்கு திரைக்கதை அமைப்பது என்பதே சவால் மிகுந்ததாக இருந்தது. ஆனாலும், அதையெல்லாம் கடந்து அதிலிருக்கும் விஷயங்களை ரசித்து செய்யும்போது அது தனி சந்தோஷம்தான். மேலும், திரைக்கதைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நாவலிலிருந்துதான் எடுக்கப்பட்டது. திரைக்கதை எழுதி முடித்துவிட்டு 2019ம் ஆண்டு படப்பிடிப்புக்குச் சென்றோம். 2020-ல் கொரோனா வந்தது. ஒருவழியாக படத்தை எடுத்து முடித்துவிட்டோம் என்றார்.

    English summary
    screenplay writer and actor elango kumaravel shared interesting information about Ponniyin Selvan movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X