For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடுத்தடுத்து சூப்பர் கார்கள் வாங்கி குவிக்கும் ஃபஹத் பாசில்.. விலை எவ்வளவுன்னு தெரியுமா?

  |

  திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி நவீன சினிமாவின் நடிப்பிற்கு அடையாளமாக ஜொலித்து வருகிறார் ஃபஹத் பாசில்.

  மலையாளம், தமிழ், தெலுங்கு என ரியல் பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் ஃபஹத் பாசில் ஒரு வெறித்தனமான கார் பிரியர்.

  சமீபத்தில் தான் விலை மதிப்புமிக்க சொகுசு கார் வாங்கிய ஃபஹத், இப்போது இன்னும் ஒரு சூப்பர் காரை தட்டித் தூக்கியுள்ளாராம்.

  ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்!ஆஸ்கர் களத்தில் ஜல்லிக்கட்டு.. இந்தியா சார்பாக போட்டியிட தேர்வான மலையாளத் திரைப்படம்!

  தோல்வியில் இருந்து வெற்றி

  தோல்வியில் இருந்து வெற்றி

  தனது தந்தையும் மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநருமான பாசிலின் துணையோடு 'கையெத்தும் தூரத்து' படம் மூலம் 2002ல் ஹீரோவாக நடிகராக அறிமுகமானார் ஃபஹத் பாசில். ஹீரோக்களுக்கான எந்தவித அடையாளங்களும் இல்லாமல் நடிக்கத் துவங்கியவர், நடிப்பிற்கான தனி அடையாளமாக பின்னாளில் கொண்டாடப்படுவார் என்பது அப்போது யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஃபஹத் பாசிலின் ஆரம்பகால திரைப்படங்கள் மாபெரும் தோல்விகளை சந்தித்தன, போதாததற்கு அவர் நடிப்பின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால், இது எல்லாவற்றையும் மீறி ஃபஹத் ஃபாசில் இன்று பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார்.

  நடிப்பில் அசுரன்

  நடிப்பில் அசுரன்

  பஞ்ச் வசனம் பேசி, விரல்களால் கோதிவிட முடியாதபடியான சிகை அலங்காரம், ஏற்றம்கொண்ட நெத்தி, நீளமான மூக்கு, பெரிய கண்கள் என மிக சாதாரணமான முகப்பொலிவோடு கேமராவின் முன்னால் நின்ற ஃபஹத் அடுத்தடுத்து செய்ததெல்லாம் மாயாஜாலங்களுக்கு நிகரானது. காதல், கருணை, காமம், குரூரம், கோபம், வீரம் உட்பட நவரசங்களையும் தனது விழிகளால் நகலெடுத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். தன்மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததோடு, விமர்சித்தவர்களையும் தனித்துவமான நடிப்பால் சுளுக்கெடுத்தார் ஃபஹத்.

  கார்களின் பிரியர்

  கார்களின் பிரியர்

  22 பீமெயில் கோட்டயம், டையமண்டு நெக்லேஷ், அன்னாயும் ரசூலும், மஹேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப், கும்பளாங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், ஜோஜி, மாலிக், தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், தெலுங்கில் புஷ்பா போன்ற படங்களில் ஃபஹத் பாசிலின் நடிப்பு ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இந்நிலையில், கார்களின் மீது அதிக மோகம் கொண்ட ஃபஹத் பாசில், சொகுசு கார்களை வாங்கி குவித்து வருகிறார். முக்கியமான தனது மனைவியும் க்யூட்டான நடிகையுமான நஸ்ரியாவுக்கு சூப்பர் கார்களை வாங்கி பரிசளித்து வருகிறார். சமீபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான லம்போர்கினி உருஸ் காரை வாங்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது 50 லட்சத்துக்கும் அதிகமான மினி கூப்பர் காரை வங்கி கெத்து காட்டியுள்ளார். பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும் இந்த மினி கூப்பர், பிரபலங்கள் விரும்பும் சூப்பர் கார்களின் வரிசையில் டாப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  பாலிவுட் நடிகர் அசத்தல்

  பாலிவுட் நடிகர் அசத்தல்

  மலையாளத்தில் ஃபஹத் பாசில் மினி கூப்பர் கார் வாங்கி அசத்தியுள்ள நிலையில், பாலிவுட்டில் தற்போது பிரபலமாகி வரும் பிரதிக் காந்தி சொகுசு கார் வாங்கியுள்ளார். 'ஸ்கேம் 1992' வெப் சீரிஸில் ஹர்ஷத் மேத்தா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் பிரதிக் காந்தி. ஒரே வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் பிரபலமான இவர், தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். இதன் விலை, 1 புள்ளி 18 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிக் காந்தி ஒரு கோடி ரூபாய்க்கு கார் வாங்கியுள்ளது, பாலிவுட் பிரபலங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ஃபஹத் பாசில் ரசிகர்களும், பிரதிக் காந்தி ரசிகர்களும் தங்களது ஹீரோக்களுக்கு வழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

  English summary
  After the Lamborghini Urus car, actor Fahadh Faasil buys a Mini Cooper. Pratik Gandhi, who gained stardom overnight with his portrayal of Harshad Mehta in the web series 'Scam 1992', joins the league of Bollywood celebrities who have invested in a Mercedes worth Rs 1.16 crore.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X