twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதை தான் எனக்கு முக்கியம்... கதாபாத்திரம் இல்லை... மாலிக் படம் குறித்து பகத் பாசில் வெளிப்படை

    |

    கொச்சி : நடிகர் பகத் பாசிலின் நடிப்பில் கடந்த வருடத்தில் 3 படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.

    அடுத்ததாக மாலிக் படமும் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மாலிக் படம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

    மோதிரத்துடன் காதல் கடிதம்... ஏழு ஆண்டுகள் கழித்து காதல் கதையை வெளியிட்ட பகத் பாசில் மோதிரத்துடன் காதல் கடிதம்... ஏழு ஆண்டுகள் கழித்து காதல் கதையை வெளியிட்ட பகத் பாசில்

    தென்னிந்திய மொழிகளில் நடிப்பு

    தென்னிந்திய மொழிகளில் நடிப்பு

    மலையாள நடிகர் பகத் பாசில் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் சிறப்பான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தமிழில் அடுத்ததாக விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    ஓடிடியில் நேரடியாக ரிலீஸ்

    ஓடிடியில் நேரடியாக ரிலீஸ்

    கடந்த ஆண்டில் மட்டுமே மலையாளத்தில் இவரது நடிப்பில் ஸீ யூ ஸூன், இருள், மற்றும் ஜோஜி என மூன்று படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் இவரது அடுத்த படமான மாலிக் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

    ஓடிடியில் ரிலீஸ்

    ஓடிடியில் ரிலீஸ்

    மாலிக் படம் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தான் தன்னுடைய வேலை குறித்து வீட்டில் யோசிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் பகத்.

    கேரக்டர்களுக்கு இல்லை

    கேரக்டர்களுக்கு இல்லை

    மேலும் தன்னுடைய படங்களில் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தன்னுடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் தன்னை தெளிவான மனநிலையுடன் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்துக் கொள்வதாகவும் மற்றவற்றை இயக்குநர் பார்த்துக் கொள்வார் என்றும் கூறியுள்ளார்.

    ஒரு சமூகத்தின் கதை

    ஒரு சமூகத்தின் கதை

    மேலும் மாலிக் படம் ஒரு சமூகத்தின் 30 ஆண்டுகால வாழ்க்கையை கூறும் படமாக உருவாகியுள்ளதாகவும், இதில் அரசியல், காதல் உள்ளிட்ட அனைத்தும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். படத்தில் எதையும் அதிகப்படியாக செய்யாமல் அளவாக செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Actor Fahath Fasil shares his experience on Malik movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X