»   »  நிஷாவைக் கரம்பிடிக்கும் கணேஷ் வெங்கட்ராம்...

நிஷாவைக் கரம்பிடிக்கும் கணேஷ் வெங்கட்ராம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது திருமணத்திற்கான பணிகளில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார். அபியும் நானும் படத்தில் அறிமுகமான கணேஷ் வெங்கட்ராம் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

சமீபத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் கணேஷ் வெங்கட்ராமிற்கு சொல்லிக்கொள்ளும் படமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் தனது திருமணம் தொடர்பான பணிகளில் தற்போது தீவிரம் காட்டிவருகிறார் கணேஷ் வெங்கட்ராம்.

Actor Ganesh Venkatram Pre - Wedding Photo Shoot

தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான நிஷாவைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரியில் கணேஷ் வெங்கட்ராம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

வரும் நவம்பர் 22 ம் தேதி இவர்கள் இருவரின் திருமணம் நடைபெறவிருக்கிறது. தற்போது திருமணத்திற்கு முன்னரான ப்ரீ- போட்டோ ஷூட் பணிகளை இருவரும் மேற்கொண்டு இருக்கின்றனர்.

Actor Ganesh Venkatram Pre - Wedding Photo Shoot

35 வயதான கணேஷ் வெங்கட்ராம் தற்போது பள்ளிக்கூடம் போகாமலே,நாயகி மற்றும் கன்ஸ் ஆப் பெனாரஸ்(ஹிந்தி) ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் அபியும் நானும் படத்திற்குப் பின்னர் த்ரிஷாவுடன் இணைந்து நாயகி படத்தில் கணேஷ் வெங்கட்ராம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Recently Actor Ganesh Venkatram & Nisha did a Pre - Wedding Photo Shoot shot by Bangalore based photographer Ram Nathan. Now Ganesh - Nisha are all set to tie the knot on Nov 22 in Chennai
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil