Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திருமணத்திற்கு முன்பே அப்பாவா.. என்ன இப்படி ஷாக் கொடுத்துருக்காரு கவுதம் கார்த்திக்!
சென்னை : நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணம் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர்.
இதனிடையே கவுதம் கார்த்திக் திருமணத்திற்கு முன்பே அப்பாவாகியதாக குறிப்பிட்டுள்ள அவரது இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா.. எந்த நாட்டுக்கு தெரியுமா?

நடிகர் கவுதம் கார்த்திக்
நடிகர் கவுதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில்தான் தன்னுடைய என்ட்ரியை தமிழில் துவக்கினார். ராதாவின் மகள் துளசி ஜோடியாக நடித்திருந்த இந்தப் படம் கவுதம் கார்த்திக்கிற்கு தமிழில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் என்ற இமேஜ் உள்ள போதிலும் தமிழில் தன்னை நிரூபிக்க தொடர்ந்து போராடி வருகிறார் கவுதம் கார்த்திக்.

மஞ்சிமா மோகனுடன் காதல்
இவரது நடிப்பில் வெளியான என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம் போன்ற படங்கள் இவருக்கு சிறந்த நடிகர் அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளன. இதனிடையே தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனுக்கும் கவுதம் கார்த்திக்கிற்கும் காதல் மலர்ந்தது.

கவுதம் கார்த்திக் -மஞ்சிமா திருமணம்
இவர்கள் இருவரும் தங்களது காதல் குறித்து நீண்ட நாட்கள் மௌனம் சாதித்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்களது காதலையும் திருமண அறிவிப்பையும் வெளியிட்டனர். தொடர்ந்து நேற்றைய தினம் உறவினர்கள், நண்பர்கள் சூழ இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

திருமணப் புகைப்படங்கள்
மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து கவுதம் மேனனுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இதனிடையே கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணத்தையொட்டி வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

திருமணத்திற்கு முன்பே அப்பா
கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவரது திருமணத்தையொட்டி இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக பகிர்ந்த ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இவர் தன்னுடைய மகள் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து திருமணத்திற்கு முன்பே கவுதம் கார்த்திக் அப்பாவாகிவிட்டாரா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பூனைக்கு அப்பாவான கவுதம் கார்த்திக்
தொடர்ந்து அந்தப் பதிவை உற்றுப் பார்த்தபின்பே அவர்கள் தெளிவடைய முடிந்தது. லூனா என்ற பூக்குட்டிக்குத்தான் கவுதம் கார்த்திக் அப்பாவாகியுள்ளார். மிகவும் க்யூட்டாக காணப்படும் லூனாவை தன்னுடைய லிட்டில் பிரின்சஸ் என்று குறிப்பிட்டுள்ளார் கவுதம் கார்த்திக். இதையடுத்து லூனாவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.