யார் கண் பட்டதோ தெரியவில்லை.. பாலிவுட்டில் அடுத்தடுத்த ஷாக்.. கார் விபத்தில் சிக்கிய கோவிந்தா மகன்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அஹுஜா நேற்று இரவு கார் விபத்தில் சிக்கினார்.
பாலிவுட்டுக்கு யார் கண் பட்டதோ தெரியவில்லை. தொடர்ந்து மரண செய்திகளாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செய்திகளாகவும், விபத்து செய்திகளாகவும் வருகின்றன.
உடல் நலக் குறைவு காரணமாக ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கான் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

என்னதான் ஆச்சு
பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கான் கேன்சர் காரணமாக அடுத்தடுத்து மறைந்த செய்தி பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியது. அதற்கு பிறகு, இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் திடீர் தற்கொலை பாலிவுட்டை தாண்டி இந்திய அளவில் அதிர்ச்சியையும், பல சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.

வருத்தத்தில் ரசிகர்கள்
தொடர்ந்து பாலிவுட்டில் துக்க செய்திகளாக வந்து கொண்டிருக்கும் நிலையில், இரங்கல் தெரிவித்தே, ரசிகர்களும் வருத்தத்தில் இருக்கின்றனர். நெபோடிசம் தான் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணம் என்றும் கொதித்தெழுந்து நீதி கேட்டும், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தியும் வருகின்றனர்.

கார் விபத்து
நடன இயக்குநர் சரோஜ் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மீண்டும் பாலிவுட்டை உலுக்கிய நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு ஜூஹுவில் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் சிக்கியது மேலும், பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எதிரே வந்த மற்றொரு கார் மீது கோவிந்தாவின் மகன் யஷ்வர்தன் அஹுஜா தனது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

காயங்களுடன் தப்பினார்
நல்லவேளையாக அடுத்த அதிர்ச்சி ஏதும் ஆகாமல், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார் யஷ்வர்தன் அஹுஜா. 56 வயதாகும் நடிகர் கோவிந்தா கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான ரங்கீலா ராஜா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட, ஹாசீனா மான் ஜாயேகி படத்தின் 21ம் ஆண்டை போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி இருந்தார்.


Click it and Unblock the Notifications











