Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, கமல்ஹாசன் பிரசாரம்!
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Lifestyle
உங்க எடையை சீக்கிரம் குறைக்க உதவும் இந்த உணவுகளை நீங்க பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம்!
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு”: திருமணத்தை அறிவித்த ஹரிஷ் கல்யாண்...
சென்னை: தமிழில் இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் படத்தில் நடித்து வருகிறார்.
அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் தான் ஹரிஷ் கல்யாணும் சினிமவில் அடியெடுத்து வைத்தார்.
இந்நிலையில், ஹரிஷ் கல்யான் தனது திருமணம் குறித்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ’கைதி’ வில்லன் ஹரிஷ் உத்தமன்.. மணப்பெண் யார் தெரியுமா?

சிந்து சமவெளியில் அறிமுகம்
பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகனான ஹரிஷ் கல்யாண். 2010-ல் வெளியான 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமானார். அமலா பாலும் அதே படத்தில் தான் நடிகையாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து "அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், வில் அம்பு" போன்ற தமிழ் படங்களில் நடித்தார். ஹரிஷ் கல்யாண். ஆனால், இதில் எந்த திரைப்படமும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல அடையாளம் கொடுக்கவில்லை.

பிக் பாஸில் என்ட்ரி
அதன் பிறகு தெலுங்கில் 'ஜெய் ஸ்ரீ ராம், காதலி, ஜெர்சி'ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஹரிஷ் கல்யாண். மேலும், 2017ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஷோவில் ஹரிஷ் கல்யாண் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதன் பிறகு அவர் நடித்த பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே படங்கள் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல கம்பேக் கொடுத்தன.

விரைவில் டும் டும் டும்
தற்போது டீசல், நூறுகோடி வானவில் ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தனது திருமண செய்தியை ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார் ஹரீஷ் கல்யாண். வருங்கால மனைவியின் கையைப் பிடித்திருக்கும் படத்தைப் ஷேர் செய்துள்ள அவர், 'புதிய தொடக்கம்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி யார் என்பதை இன்னொரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ஹரீஷ் கல்யாண். அதில், "சிறுவயது முதல் எனது கனவை பெற்றோர்கள் ஊக்குவித்தார்கள். அதேபோல் இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு வெற்றியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு திருப்தியானதாகும்" எனக் கூறியுள்ளார்.

பொண்ணு இவங்க தான்
மேலும், "இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இதனை எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், ஊடக, பத்திரிகை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள், நலன் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான தனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நாங்களே புதுப்பித்துக்கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரின் இரட்டிப்பு ஆசிர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஹரிஷ் கல்யாணுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.