“பட்டாம்பூச்சி“ படத்திற்காக சைக்கோ கொலைக்காரனாக மாறிய ஜெய்!
சென்னை : பட்டாம்பூச்சி படத்தில் சைக்கோ கொலைகார வில்லனாக நடிகர் ஜெய் நடித்துள்ளார்.
இயக்குநர் சுந்தர் சி மற்றும் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கி உள்ளார்.
இப்படத்தை சுந்தர் சியின் அவ்னிசினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மே மாதம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்
விஜய்யின் பகவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த சென்னை 600028 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் சசிகுமார் இயக்கத்தில் சுப்ரமணியபுரம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும், அட்லீ இயக்கிய ராஜா ராணி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனதால் நடிகர் ஜெய் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

சுந்தர் சி ஹீரோ
தற்போது இவர் கைவசம் அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பட்டாம்பூச்சி. இப்படத்தை பத்ரி நாராயணன் இயக்கி உள்ளார். இதில், சுந்தர் சி, ஜெய், ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு நவ்நீத் இசையமைத்துள்ளார். இசக்கி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

சைக்கோ வில்லன்
இந்த படத்தில் ஜெய் கொடூர சைக்கோ கொலைகாரனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சுந்தர். சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஊட்டியில் ஷூட்டிங்
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை இணைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் கடந்த மாதம் தொடங்கியது.


Click it and Unblock the Notifications











